கசப்பில்லாமல் பாகற்காய் தொக்கு செய்வது எப்படி?

By Dinesh TG  |  First Published Oct 3, 2022, 3:55 PM IST

பாகற்காய் கொண்டு குழம்பு,பொரியல் மற்றும் வறுவல் போன்ற பல ரெசிப்பிஸ் செய்திருப்போம்.இன்று நாம் சூப்பரான கசப்பில்லாத பாகற்காய் தொக்கு எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 


பாகற்காயானது நமது உணவுப் பையில் இருக்கும் பூச்சிகளை அகற்றும் தன்மை கொண்டது. மேலும் பசியைத் தூண்ட வழிவகுக்கிறது .உடம்பில் உள்ள பித்தத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது .பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவி புரிகிறது. இன்சுலின் சுரப்பை ஊக்குவித்து சர்க்கரை அளவை சீராக வைக்கும் ஆற்றல் கொண்டது. இன்னும் பல நன்மைகளை அளிக்கின்ற பாகற்காயை கொண்டு தொக்கு எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

Tap to resize

Latest Videos

1/4 கிலோ-பாகற்காய்
2 -தக்காளி 
1-வெங்காயம்
2 ஸ்பூன் -மிளகாய் தூள்
1/2 ஸ்பூன் -மஞ்சள் தூள்
சிறிய அளவு - புளி 
1/4 கிலோ -வெல்லம்
தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு எண்ணெய் 

மைசூரின் மதூர் வடை! செய்யலாம் வாங்க!

அரைப்பதற்கு :

2 ஸ்பூன்- அரிசி
1/2 ஸ்பூன் -கசகசா 
2 ஸ்பூன்-துவரம் பருப்பு 

தாளிப்பதற்கு:

1/2 ஸ்பூன்- கடுகு
1/2 ஸ்பூன் - சீரகம் 
1 சிட்டிகை- பெருங்காயத்தூள் 
1 கொத்து கருவேப்பிலை 

செய்முறை:

முதலில் புளியை ஊற வைத்து விட வேண்டும் ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் கசகசா ,துவரம் பருப்பு மற்றும் அரிசியை வறுத்து கொண்டு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது நீர் சேர்த்து மையை போல் அரைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். .

Brinjal Kora : ஆந்திரா ஸ்பெஷல் வங்காய கோரா!

பின் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் அதில் கடுகு,சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.அடுத்து கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்பு, பாகற்காயை சேர்த்து வதக்கி விட வேண்டும்.

பின் தக்காளி சேர்த்து வதக்கி, தக்காளி மசிந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி, பின் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்க்கவும். 

இப்போது கடாயை ஒரு தட்டு வைத்து மூடி சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து வரும் வேளையில் வெள்ளத்தை சேர்த்து அடுப்பின் தீயை சற்று குறைத்து, நீர் வற்றி தொக்கு போன்று வரும்போது அடுப்பை நிறுத்தி விட வேண்டும். அவ்வளவு தான்.கசப்பில்லாத பாகற்காய் தொக்கு தயார்!
 

click me!