ஆந்திராவில் பிரியாணி, கோங்குரா எவ்வளவு பிரபலமோ அதே அளவிற்கு பிரபலமான மற்றும் பாரம்பரியமான உணவு குத்தி வங்காய கோரா என்றழைக்கப்படும் கத்திரிக்காய் கரி.நாம் கத்திரிக்காய் வைத்து எண்ணெய் கத்திரிக்காய், கத்திரிக்காய் தொக்கு, கத்திரிக்காய் குழம்பு செய்திருப்போம். இது என்ன? குத்தி வங்காய கோரா! வாங்க. இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதய தசைகள் நன்கு வலு பெறவும், மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கவும்,சிறுநீரக கற்களை அகற்றவும், மூல நோயில் இருந்து விடுபடவும்,சுவாசக் கோளாறுகளை நீக்கவும் கத்திரிக்காய் அருமருந்தாக பயன்படுகிறது. இவ்வளவு பயன்களை அளிக்கும் கத்தரிக்காய் வைத்து குத்து வங்காய கோரா எப்படி செய்யலாம்?என்று பார்க்கலாம். இந்த ரெசிபிக்கு பர்பில் நிற கத்திரிக்காய் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
200 கி கத்தரிக்காய்
1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
1 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் கச கச
1/2 ஸ்பூன் எள்ளு
1 கிராம்பு
2 பல் பூண்டு
1/2 இன்ச் பட்டை
1/2 ஸ்பூன் வெள்ளம்(தூள்)
1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
1 சிட்டிகை மஞ்சள் தூள்
1/2 ஸ்பூன் தனியா தூள்
1/4 கப் புளி தண்ணீர்
1/2 ஸ்பூன் கெட்டி தயிர்
1/2 கப் துருவிய தேங்காய்
1/2 ஸ்பூன் பாசி பருப்பு
2 சிட்டிகை பெருங்காய தூள்
உப்பு தேவையான அளவு
ஒரு வாரம் வெச்சு சாப்பிடலாம்...! கெட்டு போகாத சின்ன வெங்காய தொக்கு!
செய்முறை:
அடுப்பில் ஒரு Pan வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு,வெங்காயம்,பாசி பருப்பு,பெருங்காய தூள் சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன்,பூண்டு சேர்த்து வதக்கவும்.பூண்டின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
பின் இதனுடன் தனியா தூள் மற்றும் கத்திரிக்காயை சேர்க்க வேண்டும். கத்திரிக்கையின் நிறம் மாறும் வரையில் வதக்கி விட வேண்டும்.பின் ஒரு மூடி இட்டு சுமார் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்க வேண்டும். இப்போது கத்திரிக்காய் சாஃட்டாக மாறி இருக்கும்.
ஒரு பானில் சிறிது எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்து எடுத்து அதனை கத்தரிக்காயுடன் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
Madurai Kari Dosa : மணக்கும் மதுரை கறி தோசை!
5 நிமிடங்கள் கழித்து ,கெட்டி தயிர்,வெள்ளம் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும். பின் எள்ளு,மஞ்சள் தூள், தனியா தூள்,மிளகாய் தூள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
அதனுடன் புளி தண்ணீர் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அவ்ளோதாங்க சுவையான ஆந்திராவின் வங்காய கோரா ரெடி!