தீபாவளிக்கு ரெடியாக உள்ளீர்களா? வாயில் போட்டவுடன் கரையும் பர்பி செய்யலாமா?

By Dinesh TGFirst Published Oct 18, 2022, 7:10 PM IST
Highlights

தீபாவளிக்கு இன்னும் வெகு சில நாட்களே உள்ள நிலையில் இந்த முறை வழக்கமாக செய்யும் ஸ்வீட் செய்யாமல் கொஞ்சம் டிஃபரென்டாக புது ஸ்வீட் செய்யலாம் என்றுயோசித்தால் இந்த பதிவு எங்களுக்காக தான் . இந்த ஸ்வீட் டை வீட்டிலேயே எளிமையாக வும், சுவையாகவும் நாமே செய்து விடலாம்.

நமது உறவினர்கள், நண்பர்களுக்கு இம்முறை கடைகளில் வாங்கி ஸ்வீட்ஸ் தருவதை விட , வீட்டில் நம் கையால் செய்த இந்த ஸ்வீட் டை கொடுத்து உங்கள் அன்பை பறிமாறுங்கள் .என்ன ஸ்வீட் ? என்று யோசிக்கிறீர்களா? கடலை மாவை வைத்து வெறும் 5 நிமிட நேரத்தில் எளிமையான மற்றும் சுவையான ஸ்வீட் செய்து அசத்துவது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

கடலை மாவு பர்பி செய்ய தேவையான பொருட்கள்:

கடலை மாவு- 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
நெய்- 1/2 கப்
ஏலக்காய் தூள்-1/4 ஸ்பூன்
நறுக்கிய பாதாம்- கொஞ்சம் 
குங்மப்பூ – 1 சிட்டிகை 

Milk: பாலுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது? ஏன் தெரியுமா?

செய்முறை :

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கம்பி பதமாக மாறும் வரை காத்திருக்கவும். இப்போது சர்க்கரை பாகு தயார். 

அடுப்பில் இன்னொரு கடாயில் வைத்து அதில் சிறிது நெய் சேர்த்து கொள்ளவும். நெய் உருகிய பின் , அதில் கடலை மாவை சேர்த்து வறுத்து கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை கை விடாமல் நன்றாக கிளற வேண்டும். பின் அதில் சர்க்கரை பாகை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளற வேண்டும். 

பின்பு ஒரு பாத்திரத்தில் சுற்றி சிறிது நெய் தடவி , இந்த கடலை மாவினை சேர்த்து , அதன் மீது வெட்டி வைத்துள்ள பாதாம் பருப்பினை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் மாவின் மீது குங்மப்பூ தூவ வேண்டும். 

Badusha Sweet : இந்த தீபாவளிக்கு தித்திப்பான பாதுஷா செய்யலாம் வாங்க!

இந்த மாவினை சுமார் 2 மணி நேரம் வரை அப்படியே விட்டு விட வேண்டும். 2 மணி நேரத்திற்கு பின், இந்த மாவை சதுர அல்லது வட்ட வடிவில் ஒரு கத்தி கொண்டு வெட்டி எடுத்துக் கொள்ளவும். அவ்ளோதான் மிகவும் எளிமையான , மணக்க மணக்க மற்றும் சுவையான வாயில் போட்டவுடன் கரையும் கடலை மாவு பர்பி ரெடி! இதனை இந்த தீபாவளிக்கு நிச்சயமாக செய்து அசத்துங்கள்.

click me!