தீபாவளி ஸ்பெஷல்! : என்ன ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா?

By Dinesh TG  |  First Published Oct 15, 2022, 1:39 PM IST

பெரும்பாலும் காஜு கட்லியை வெளியில் ஸ்வீட் கடைகளில் தான் பொதுவாக வாங்கி சுவைத்து இருப்பீர்கள். வீட்டில் செய்து பார்த்து இருக்கீங்களா?
 


வழக்கமாக நாம் பண்டிகை தினங்களில் செய்யும் க்ளோப் ஜாமுன்,வடை , முறுக்கு ,அதிரசம் போன்ற பலகாரங்களை செய்யாமல் இந்த முறை சற்று வித்தியாசமாகவும், புது வெரைட்டியாகவும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீங்களா? அப்போ இது உங்களுக்கான பதிவு .இந்தியாவின் மிக பரிபாலமான இனிப்பு வகைகளில் ஒன்றான காஜூ கட்லியை எப்படி செய்யலாம் என்று பார்க்க உள்ளோம்..

பெரும்பாலும் காஜு கட்லியை வெளியில் ஸ்வீட் கடைகளில் தான் பொதுவாக வாங்கி சுவைத்து இருப்பீர்கள். வீட்டில் செய்து பார்த்து இருக்கீங்களா?

Tap to resize

Latest Videos

மிகவும் எளிமையான மற்றும் சுவையான இந்த ஸ்வீட்டை மிக குறைவான நேரத்திலலேயே வீட்டிலேயே செய்ய முடியும். இதில் சர்க்கரை, முந்திரி பவுடர், மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்வீட்டை எப்படி வீட்டில் செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

Mirchi bajji : ஆந்திராவின் ஸ்பெஷல் - ஸ்ட்ரீட் புட் மிரப்பகாய் பஜ்ஜி செய்வோமா?

தேவையான பொருட்கள்:

முந்திரி 1 கப் 
சர்க்கரை 1/2 கப் 
ஏலக்காய் தூள் 2 சிட்டிகை 
நெய் தேவையான அளவு
சில்வர் லீவிஸ் தேவையான அளவு
பட்டர் பேப்பர் தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு கப் முந்திரியை மிக்சி ஜாரில் மாற்றி நன்கு பவுடராக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த முந்திரி பவுடரை சல்லடையில் சலித்து கொண்டு, . அரை படாமல் இருக்கின்ற சிறு சிறு முந்திரித் துண்டினை மறுபடியும் மிக்சி ஜாரில் சேர்த்து நைஸான பவுடர் போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் மிதமான சூட்டில் ஒரு pan ஐ வைத்து, அதில் 1/4 கப் நீர் சேர்த்து ,1/2 கப் சர்க்கரையையும் சேர்த்து அதனை நன்றாக கரைத்து கம்பி பதமாக மாறும் வரை கிண்டி கொண்டே இருக்க வேண்டும். பாகு கம்பிப் பதத்தில் வந்த பிறகு,அதில் அரைத்து வைத்துள்ள முந்திரி பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.(கிளறுவதை நிறுத்தினால் அடி பிடித்து விடும்) முந்திரி பவுடர் வெந்து, மாவனது கொஞ்சம் கெட்டியாக மாறும் போது அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.

ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ‘காஷ்மீரி தம் ஆலு’ செய்வோமா?

மாவனது உருட்டும் பதத்தில் வரும் போது அடுப்பை ஆப் செய்து விட்டு அந்த சூட்டிலேயே, மாவை குறைந்தது 2 நிமிடம் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் ஒரு டிரேவில் ஒரு பட்டர் பேப்பர் விரித்து, இந்த மாவினை மாற்றிக் , பின்னர் அதன் மேல் இன்னொரு பட்டர் பேப்பர் போட்டு சிறிது நெய் தடவி, மாவினை சப்பாத்தி தேய்க்கும் கட்டையால் தேய்த்து ட்ரே முழுவதும் மாவினை பரப்பி விடவும். 

பின் மேலுள்ள பட்டர் பேப்பரை அகற்றி விட்டு சில்வர் லீவிஸ் ஐ மாவின் மேல் பக்குவமாக வைத்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு கத்தி வைத்து டைமன்ட் வடிவிலோ அல்லது உங்களுக்கு பிடிக்கும் வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெட்டிய துண்டுகளை ஆற வைத்து விட்டு பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்தால், சுவையான காஜூ கட்லி ரெடி!
 

click me!