இன்றைய பதிவில் பால் மற்றும் பால் பவுடர் வைத்து ஒரு ஸ்வீட் செய்வது எப்படி என்று காண உள்ளோம்.என்ன ஸ்வீட் ஆக இருக்கும்? என்று யோசிக்கிறீர்களா?
தீப ஒளியாம் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. புத்தாடை, பாட்டாசுக்கு அடுத்த படியாக தீபாவளி என்ன மெனு பண்ணலாம், வருஷா வருஷம் சாப்பிடுகின்ற ஸ்னாக்ஸ் செய்யாமல், கடைகளில் இருந்து ஸ்வீட்ஸ் வாங்காமல் கொஞ்சம் நியூ வெரைட்டியா நாமே வீட்டில் ஏதாவது கொஞ்சம் ஈஸியா ட்ரை பண்ணனும்ன்னு ஆசை படுறீங்களா? அப்போ நிச்சயம் இது உங்களுக்கான பதிவு தான்.
இன்றைய பதிவில் பால் மற்றும் பால் பவுடர் வைத்து ஒரு ஸ்வீட் செய்வது எப்படி என்று காண உள்ளோம்.என்ன ஸ்வீட் ஆக இருக்கும்? என்று யோசிக்கிறீர்களா? மில்க் பேடா இனிப்பானது இந்தியாவில் பிரபலமான மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் ஸ்வீட்ஸ் வகை ஆகும். பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது இதனை அதிகம் செய்வர்.
இதனுடன் சேர்க்கப்படும் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பொடி இதன் சுவையையும் நறுமணத்தையும் மேலும் கூட்டுகிறது.
Wheat Globe Jamoon : தீபாவளி ஸ்பெஷல்- கெஸ்ட்க்கு புது ஸ்னாக்ஸ் செய்வோமா?
மில்க் பேடா செய்ய தேவையான பொருட்கள்:
பால் பவுடர் - 3/4 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 200கிராம்
நெய் -1 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
குங்குமப் பூ - 3-4
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து நெய் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும். அதில் பால் மற்றும் பால் பவுடர் சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து 3 முதல் 5 நிமிடங்கள் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும்.அடியில் பிடிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். பாலும் கண்டென்ஸ்ட் மில்க்ம் நன்றாக ஒன்றி இணைந்து ஒரு நன்கு கெட்டியான பதத்திற்கு மாறும். இப்பொழுது இதில் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் தூளை நன்றாக கிளறி விட வேண்டும்.
தீபாவளி ஸ்பெஷல்! : என்ன ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா?
நன்கு கிளறி விட்டு கடாயின் ஓரங்களில் படாமல் சமைக்கவும். சுமார் பத்து நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். ஆறிய பின் அதன் மேல் குங்குமப் பூவை சேர்த்து மிக்ஸ் செய்து விட வேண்டும். இப்பொழுது கைகளால் சிறு சிறு உருண்டைகளாக செய்ய வேண்டும். பின் அதனை உள்ளங்கைகளால் பேடா வடிவிற்கு தட்டி விட வேண்டும்.பின் உங்கள் பெருவிரல் அச்சை பேடாவில் பதிக்க வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து சுவைத்தால் இனிப்பான ,சுவையான மில்க் பேடா ரெடி! இந்த தீபாவளிக்கு இதனை செய்து உங்கள் குடும்பத்தாருடன் சுவைத்து மகிழுங்கள்.