ஈவினிங் ஸ்னாக்ஸிற்கு அருமையான "அவல் கட்லெட்"! செய்யலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Dec 15, 2022, 8:35 PM IST

வாருங்கள்! ருசியான அவல் கட்லெடை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


அனைவருக்கும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் பட்டியலில் கட்லெட் நிச்சயம் இடம் பெறும் . கட்லெட்டை வெஜ் கட்லெட், கார்ன் கட்லெட், சிக்கன் கட்லெட், நண்டு கட்லெட் என்று பல விதங்களில் செய்யலாம். ஒவ்வொன்றும் ஒரு பிரத்யேகமான சுவையை தரும். அந்த வகையில் இன்று நாம் அவல் சேர்த்து அருமையான கட்லெட் செய்ய உள்ளோம். 

இந்த அவல் கட்லெட்டை பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கும், அலுவல் முடித்து வரும் பெரியவர்களுக்கும், வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு என அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு ஸ்னாக்ஸ் என்று கூறலாம். இதனை இந்த கொட்டும் மழை நேரத்தில் சுட சுட செய்து கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள். 

Latest Videos

undefined

வாருங்கள்! ருசியான அவல் கட்லெடை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளை அவல் – 1 கப்
உருளைக்கிழங்கு –2
பெரிய வெங்காயம் –1
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 2 பற்கள் 
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் – 1/2 ஸ்பூன்
துருவிய இஞ்சி – சிறிதளவு
கரம் மசாலா – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு –1ஸ்பூன் 
மல்லித்தழை-கையளவு 
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு 

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற ஊட்ட சத்து கொண்ட “பாசிப்பருப்பு இட்லி”

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கினை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். விசில் அடங்கிய பிறகு, வெந்த உருளைக்கிழங்கினை தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். 

வெங்காயம், பூண்டு, மல்லித்தழை மற்றும் பச்சை மிளகாயை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் அவலை எடுத்துக் கொண்டு தண்ணீர் ஊற்றி சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஊறிய அவலை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விட்டு, உருளைக்கிழங்கில் சேர்க்க வேண்டும். பின் அதில் பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

பின்னர் இதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை தேவையான அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இந்த கலவையில் துருவிய இஞ்சி, பொடியாக அரிந்த பூண்டு, மல்லித்தழை மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும் .

அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். பிசைந்த பின்னர், மாவினை சிறிது கையில் எடுத்து உருண்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். அனைத்து மாவினையும் இதே போன்று செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு தோசைக் கல் வைத்து, எண்ணெய் ஊற்றி, தட்டியுள்ள கட்லெட்களை வைத்து ஒரு புறம் வேக வைத்து விட்டு, பின் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். 

ருசியான மற்றும் அருமையான அவல் கட்லெட் ரெடி!!! இதனை சாஸ் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

click me!