மழை நேரத்தில் சுட சுட "ஓட்ஸ் குழி பணியாரம்" செய்து சாப்பிடலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Dec 15, 2022, 7:20 PM IST

இன்று நாம் ஓட்ஸ் வைத்து சூப்பரான குழி பணியாரம் செய்ய உள்ளோம். 


வழக்கமாக ஓட்ஸ் வைத்து கட்லெட், இட்லி, உப்மா ,கஞ்சி என்று பல விதங்களில் சமைத்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று நாம் ஓட்ஸ் வைத்து சூப்பரான குழி பணியாரம் செய்ய உள்ளோம். 

இந்த ஓட்ஸ் குழி பணியாரம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் டேஸ்ட்டாக இருக்கும். வழக்கமாக செய்யும் காலை உணவுகளுக்கு ஒரு நல்ல சேஞ்சாக இருக்கும். இந்த பணியாரத்திற்கு சட்னி வைத்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும். வாருங்கள்! ருசியான ஓட்ஸ் குழி பணியாரம் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

Latest Videos

undefined

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 3 கப் 
தயிர் - 1 கப் 
அரிசி மாவு - 1 1/2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன் 

தாளிக்க :

எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு-1 ஸ்பூன் 
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து 
துருவிய கேரட் - 1 கப்
மல்லித்தழை - கையளவு 

குழந்தைகள் விரும்பும் "வெண்ணிலா கப் கேக்" வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ஓட்ஸ் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.வெங்காயம் ,கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். மல்லித்தழையை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, கடுகு, உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து விட்டு, பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட வேண்டும். 

பிறகு துருவிய கேரட் மற்றும் அரிந்து வைத்துள்ள மல்லித் தழையை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். இப்போது வதக்கிய இந்த கலவையை ஓட்ஸ் மாவில் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து, அதன் குழிகளில் சிறிது எண்ணெய் விட்டு, மாவினை ஊற்ற வேண்டும். மாவு ஊற்றிய பின் சுற்றி சிறிது எண்ணெய் விட்டு, ஒரு பக்கம் வெந்த பிறகு, மறு பக்கம் திருப்பி போட்டு, வேக வைக்க வேண்டும். அவ்ளோதாங்க! ருசியான ஓட்ஸ் பணியாரம் ரெடி!

click me!