வீடே மணமணக்கும் "ராஜஸ்தான் மட்டன் கிரேவி"!

By Dinesh TG  |  First Published Dec 15, 2022, 6:09 PM IST

வாருங்கள் ! ராஜஸ்தானி மட்டன் கிரேவியை வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


மட்டன் என்றால் போதும் வேறு எதுவும் வேண்டாம் அசைவ பிரியர்களுக்கு. மட்டனில் எந்த ரெசிபி செய்து தந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் காலி ஆகி விடும். மட்டன் வைத்து பல ஊர்களில் பல விதங்களாக செய்து சாப்பிடுகிறார்கள். அந்த வகையில் இன்று நாம் ராஜஸ்தான் ஸ்டைலில் மட்டன் வைத்து சுவையான ஒரு கிரேவியை காண உள்ளோம். 

இந்த மட்டன் கிரேவி பிரியாணி சப்பாத்தி, புல்கா, தோசை என அனைத்திறகும் வைத்து சாப்பிடலாம். மேலும் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாக இருக்கும். 

Latest Videos

undefined

இந்த கிரேவியை செய்யும் போதே வீடு முழுவதும் மணமணக்கும். வாருங்கள்!. ராஜஸ்தானி மட்டன் கிரேவியை வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

மட்டன் -1/2 கிலோ 
வெங்காயம்-4 
இஞ்சி பூண்டு விழுது-1 1/2 ஸ்பூன் 
நெய்-2 ஸ்பூன் 
 பட்டை-1 துண்டு 
 ஏலக்காய் - 3
 பிரியாணி இலை -1
ஏலக்காய்-2
ஜாதிக்காய்- சிறிது 
லவங்கம்-3
வர மிளகாய் - 3
காஷ்மீரி மிளகாய் -25 கிராம் 
தனியா துாள் -2 ஸ்பூன் 
தயிர்-1 கப் 
எண்ணெய் -தேவையான அளவு 
உப்பு -தேவையான அளவு
மல்லித்தழை-கையளவு 

காரசாரமான சிக்கன் சுக்கா ! செய்த அடுத்த நிமிடத்தில் காலி ஆகி விடும்.

செய்முறை:

முதலில் மட்டனை சுத்தம் செய்து விட்டு தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை மெல்லிதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். காஷ்மீரி மிளகாய் வத்தலை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொண்டு அதில் தண்ணீர் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து பின் அதனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் 1 குக்கர் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்ததாக வர மிளகாய் சேர்த்து கிளறி விட வேண்டும். 

பின் மட்டன் மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்ற குக்கரை மூடி விட்டு 7 விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். மட்டனை வேக வைத்த பின்னர்,அரைத்து வைத்துள்ள காஷ்மீரி மிளகாய் பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும்.பின் கெட்டி தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு 10 நிமிடங்கள் வரை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். 

இறுதியாக மல்லித்தழையை தூவி இறக்கினால் சூப்பரான சுவையில் ராஜஸ்தானி மட்டன் கிரேவி ரெடி!

click me!