சுவையான வெண்ணிலா கப் கேக்கினை வீட்டிலேயே சுலபமாகவும் சுவையாகவும் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக கேக், பிரெட் போன்றவற்றை நாம் கடைகளில் அல்லது பேக்கரியில் இருந்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாமே சுவையாக வீட்டில் கேக் செய்யலாமா? கேக்கை வெண்ணிலா, ஸ்ட்ராபெரி, மார்பில், சாக்லேட் என்று பல விதங்களில் செய்யலாம். அதே போல் கப் கேக், புட்டிங் கேக் என்று இன்னும பல விதங்களாக செய்ய முடியும்.
அந்த வகையில் இன்று நாம் சுவையான கப் கேக் ரெசிபியை காண உள்ளோம். கேக்கில் பல் விதங்கள் இருந்தாலும் எப்போதும் வெண்ணிலா கேக்கிற்கு எப்போதும் தனித்துவமான ஒரு இடம் உண்டு.
அப்படியான சுவையான வெண்ணிலா கப் கேக்கினை வீட்டிலேயே சுலபமாகவும் சுவையாகவும் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பால்- 50 மில்லி
பட்டர்-6ஸ்பூன்
முட்டை-3
மைதா மாவு- 1 1/4 கப்
சர்க்கரை- 3/4 கப்
வெண்ணிலா எசன்ஸ்-1 ஸ்பூன்
பேக்கிங் பவுடர்-1 ஸ்பூன்
உப்பு- 1/4 ஸ்பூன்
காரசாரமான சிக்கன் சுக்கா ! செய்த அடுத்த நிமிடத்தில் காலி ஆகி விடும்.
செய்முறை:
ஒரு சுத்தமான பாத்திரத்தில் பால் ஊற்றி அதில் பட்டர் சேர்த்து அடுப்பில் வைத்து காய்த்து கொள்ள வேண்டும். ஒரு அகலமான பௌலில் முட்டைகளை உடைத்து பீட் செய்து கொண்டு அதில் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொண்டு, நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதே பௌலில் பேக்கிங் பவுடர்,மைதா மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.பின் பட்டர் கலந்த பாலை இந்த கலவையில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
அடுப்பில் ஒரு அடிகனமான விலாசமான பாத்திரம் வைத்து அதில் ஸ்டாண்ட் வைத்து தீயினை மிதமாக வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும்.
பின் சின்ன சின்ன பௌல்களில் மாவினை (பௌலின் பாதி அளவு ஊற்ற வேண்டும்) ஊற்றி வைத்து ஸ்டாண்டில் கப் கேக்குகான லைனரை வைத்து ஒவ்வொரு பௌலாக வைத்து விட வேண்டும்.
அடுப்பில் சூடாக உள்ள பாத்திரத்தில் இந்த சிறிய பௌல்களை ஒவ்வொன்றாக உள்ளே அடுக்கி வைத்து விட்டு,பாத்திரத்தை மூடிவிட்டு, கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை சிம்மில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். அவ்ளோதாங்க! ருசியான வெண்ணிலா கப் கேக் ரெடி!!!
(ஒரு கத்தி வைத்து குத்தி பார்க்க வேண்டும். மாவு ஒட்டாமல் வந்தால் கேக் ரெடி. ஒட்டி வந்தால் மேலும் 5 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்)