காரசாரமான "சிக்கன் சுக்கா"! செய்த அடுத்த நிமிடத்தில் காலி ஆகி விடும்!

By Dinesh TG  |  First Published Dec 13, 2022, 6:04 PM IST

வாருங்கள்! காரசாரமான சிக்கன் சுக்காவை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான்.சிக்கன் வைத்து பல விதமான ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று நாம் சிக்கன் வைத்து சூப்பரான ஸ்பைசியான சிக்கன் சுக்கா ரெசிபியை காண உள்ளோம். இந்த சிக்கன் சுக்கா ரெசிபியை வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய சுவையில் அருமையாக இருக்கும். 

இதனை நாண், சப்பாத்தி, புல்கா,பரோட்டா போன்றவற்றிக்கு வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். வாருங்கள்! காரசாரமான சிக்கன் சுக்காவை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்:

ஊற வைக்க:

சிக்கன் -1/2 கிலோ 

அரைப்பதற்கு:

தனியா- 2 ஸ்பூன் 
மிளகு- 2ஸ்பூன் 
சோம்பு - 1 ஸ்பூன் 
பட்டை- 2 இன்ச் 
லவங்கம் - 4
ஏலக்காய்- 1
கல் பாசி -சிறிது 

மசாலா செய்வதற்கு:

இஞ்சு பூண்டு விழுது -2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன் 
எலுமிச்சை சாறு -1/2 பழம் 
உப்பு- தேவையான அளவு 

சுக்கா செய்வதற்கு :

வெங்காயம் -2 
பச்சை மிளகாய்-2
கருவேப்பிலை-1 கொத்து 
மல்லித்தழை -கையளவு 
தேவையான அளவு- எண்ணெய் 

மலபார் ஸ்டைலில் ருசியான மட்டன் குருமா செய்யலாம் வாங்க!

செய்முறை :

முதலில் சிக்கனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 2 முறை அலசி வைத்துக் கொள்ள வேண்டும் .வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் மல்லித் தழையை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். லெமன் ஜூஸ் பிழிந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடான பின்பு ,சோம்பு, மிளகு, பட்டை, லவங்கம் ,ஏலக்காய் ,கல்பாசி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்தவற்றை ஆற வைத்துக் கொண்டு, பின் மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.அரைத்த விழுதை சிக்கனில் சேர்த்து பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் , லெமன் ஜூஸ் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் சிக்கன் கலவையில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டிக் கொண்டு அடுத்ததாக சிக்கன் கலவையை சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் 1 கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் ஒரு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். 

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து கொஞ்சம் வதக்கி விட்டு, பின் தீயினை சிம்மில் வைத்து சுமார் பத்து நிமிடங்கள் வரை கடாயை ஒரு தட்டு போட்டு மூடி விட வேண்டும். அவ்வப்போது தட்டினை திறந்து கிளறி விட வேண்டும். 

10 நிமிடங்களுக்கு பிறகு ,சிக்கனும் எண்ணெயும் பிரிந்து வரும் நேரத்தில் அடுப்பினை ஆஃப் செய்து விட்டு, இறுதியாக மல்லித்தழையை தூவினால் சிக்கன் சுக்கா ரெடி

click me!