நா ஊரும் ஊறுகாய்! இஞ்சி பூண்டு ஊறுகாய் வீட்டிலேயே செய்வோமா?

By Dinesh TGFirst Published Sep 28, 2022, 5:34 PM IST
Highlights

நாம் சாப்பிடும் உணவு சுவை மிகுந்ததாக இருந்தால் மட்டும் பத்தாது .அது உடலுக்கு சத்தையும்,  ஆரோக்கியத்தையும் தருவதாக இருத்தல் வேண்டும். அந்த வகையில் அதிக  சத்து மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இஞ்சி, பூண்டை வைத்து ஊறுகாயை வீட்டில் எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

வயிற்றுக் கோளாறுகளில் இருந்து  நிவாரணம் பெற  இஞ்சி   உதவுகிறது. மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நிவாரணத்தை தருகிறது. குமட்டல்,வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைக்க இஞ்சி உதவுகிறது.

தாய்பாலை அதிகப்படுத்தும் தன்மை பூண்டிற்கு உண்டு. மேலும் சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும், வியர்வையை பெருக்கி வெளியேற்றும்,  உடற்சக்தியை மேம்படுத்த , ஜீரண சக்தியை பெருகும் ஆற்றல் இதற்கு உண்டு. ரத்த கொதிப்பை தணிக்க , உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்க பூண்டு பயன்படுகிறது. 

இவ்வளவு நன்மைகளை தரும் இஞ்சி பூண்டை கொண்டு எவ்வாறு ஊறுகாய் செய்யலாம் என்று பார்ப்போம்.

ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதம் வரகு அரிசி கிச்சடி !

தேவையான பொருட்கள்:

வெந்தயம் 3/4 ஸ்பூன் 

கடுகு 1/2 ஸ்பூன் 

நல்லண்ணெய்  தேவையான அளவு 

இஞ்சி  3/4 கப் தோல் உரித்தது 

பூண்டு  3/4 கப் உரித்தது.

புளி சிறுது 

மிளகாய் தூள் 1 ஸ்பூன்

சிவப்பு கலர் பவுடர் 1 ஸ்பூன் 

வெள்ளம் துருவியது  1 ஸ்பூன் 

உப்பு தேவையான அளவு 

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் விடாமல் கடுகு மற்றும் வெந்தயத்தை தனி தனியாக வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.  பின் கடாயில்  நல்லண்ணெய்   சேர்த்து இஞ்சி மற்றும் பூண்டை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் சிறிது புளி சேர்த்து வறுத்து கொள்ள வேண்டும். நன்றாக  ஆரிய பின் மிக்சியில் சிறிது நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். 

இருதயத்தைப் பாதுகாக்கும் வால்நட்ஸ்: ஆய்வில் வெளிவந்த சூப்பர் தகவல்!

பின் அதே கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காய தூள்,  கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். இதனுடன் 

அரைத்த விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தனி மிளகாய் தூள் ,   சிவப்பு கலர் பவுடர், வறுத்த வெந்தய பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக ம வதக்கி  செய்து விட வேண்டும். பாதியாக சுண்டும் வரை வதக்க வேண்டும். இப்போது இதில் வெள்ளத்தை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். அருமையான , டேஸ்டான , மருத்துவ குணம் கொண்ட இஞ்சி பூண்டு ஊறுகாய் ரெடி! நீங்களும் வீட்டிலேயே செய்து பாருங்க . சூப்பரா வரும்...

click me!