Pongal Special | பொங்கல் விடுமுறைக்கு வாயில் போட்டவுடன் கரையும் "பெங்காலி மிஷ்டி டோய்" ஸ்வீட் செய்யலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Jan 9, 2023, 5:10 PM IST

வாருங்கள்! ருசியான '"பெங்காலி மிஷ்டி டோய்" ஸ்வீட்னை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 


வர இருக்கும் பொங்கல் பண்டிகைக்கு அனைவருக்கும் தொடர் விடுமுறை இருக்குமென்பதால் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவழிக்கலாம். பொங்கல் பண்டிகைக்காக என்னென்ன ஸ்வீட்ஸ் அண்ட் ரெசிபிஸ் செய்யலாம் என்று நீங்களும் ஒரு பிளான் செய்து வைத்திருப்பீர்கள்.

இந்த முறை பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக செய்கின்ற ஸ்வீட்களை செய்யாமல் சற்று வித்தியாசமாக பெங்காலி ஸ்வீட்டை செய்து நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து இந்த பண்டிகையை கொண்டாடலாம் வாங்க.

பெங்காலி ஸ்வீட் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவில் வருவது ரசகுல்லா,ரசமலாய் தான். ஆனால் அதனை தவிர்த்து பல விதமான ஸ்வீட் வகைகள் உள்ளன. அந்த வகையில் இன்று நாம் சூப்பரான வாயில் போட்டுவிடன் கரையும் '"பெங்காலி மிஷ்டி டோய்" ஸ்வீட்டினை செய்து கொண்டாடலாம்.

வாருங்கள்! ருசியான '"பெங்காலி மிஷ்டி டோய்" ஸ்வீட்னை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • கன்டென்ஸ்டு மில்க் - 100 மி.லி. 
  • கெட்டி தயிர் - 50 மி.லி.
  • சர்க்கரை - 3 ஸ்பூன்
  • பால் - 400 மி.லி.
  • குங்குமப்பூ - 1 கிராம்
  • பிஸ்தா பருப்பு - தேவையான அளவு


        பொங்கல் ரெசிபி 2023 - இந்த முறை அவலில் சர்க்கரை பொங்கல் செய்யலாம் வாங்க!

Tap to resize

Latest Videos


செய்முறை:

முதலில் தயிரை வடிகட்டியில் ஊற்றி, அதிலுள்ள தண்ணீர் நீங்கும் வரையில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிஸ்தாவை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு நன்றாக பீட் செய்து கிரீம் போன்ற பதம் வரும் வரை நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து தீயினை மிதமாக வைத்து நன்றாக காய்த்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சர்க்கரை சேர்த்து நன்கு உருகும் வரை கிளறிவிட்டு அதில் சிறிது பால் சேர்த்து இரண்டையும் கலந்து கிரீம் பதம் வரும் வரை மிக்ஸ் செய்ய வேண்டும்.

இப்போது நமக்கு 'பால் கேரமல்' ரெடி ஆயிற்று. பாத்திரத்தில் இருக்கும் கன்டென்ஸ்டு மில்க் கலவையில், இந்த கேரமலை சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு அதில் கெட்டி தயிர் சேர்த்துக்மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும்.அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். பின் பாத்திரத்தில் ஸ்டாண்ட் வைத்து அதில் தயிர் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து விட வேண்டும்.

தயிர் உள்ள பாத்திரத்தை மெல்லிய துணி அல்லது அலுமினியம் பாயில் கவரரால் மூடி ஸ்டாண்ட் மீது வைக்க வேண்டும். பின் வாணலியை ஒரு தட்டு அல்லது மூடி போட்டு மூடி விட வேண்டும். இந்த கலவையை சுமார் 25 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். பின்னர் அதன் மீது பொடிதாக நறுக்கிய பிஸ்தா, குங்குமப்பூ தூவிட்டு அடுப்பினை ஆஃப் செய்ய வேண்டும். இப்பொழுது நாவில் போட்டவுடன் கரையும் '"பெங்காலி மிஷ்டி டோய்" ரெடி!

click me!