பொங்கல் 2023 - கொஞ்சம் வித்தியாசமாக திணை கருப்பட்டி பொங்கல் செய்யலாம் வாங்க,!

By Dinesh TG  |  First Published Jan 9, 2023, 11:42 AM IST

வாருங்கள்! ருசியான கருப்பட்டி பொங்கல் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 


உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு நாம் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல்,பால் பொங்கல் என்று சமைத்து மகிழ்வோம். சூரிய பகவானுக்கும், உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் பசுவிற்கும் பொதுவாக பச்சரிசியில் சர்க்கரை பொங்கல் செய்து படைப்பதே வழக்கம். இந்த முறை சற்று வித்தியாசமாக நாம் சிறுதானிய வகையில் ஒன்றான திணையும் கருப்பட்டியும் சேர்த்து பொங்கல் செய்து கொண்டலாம்.

வாருங்கள்! ருசியான திணை கருப்பட்டி பொங்கலை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • திணை - 1/2 கப்
  • கருப்பட்டி - 1 கப்
  • பாசிப்பருப்பு - 2 ஸ்பூன்
  • தண்ணீர் - 2 கப்
  • ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
  • சுக்கு பொடி - 1/2 ஸ்பூன்
  • பொடித்த முந்திரி - 15
  • உலர் திராட்சை – 10

     பொங்கல் ஸ்பெஷல் - கற்கண்டு பொங்கல் செய்து குடும்பத்துடன் கொண்டாடுங்கள்!

Tap to resize

Latest Videos


செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடான பிறகு, அதில் பாசிப்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் திணையை சேர்த்து நன்றாக வறுத்துக் கிளறி விட்டு அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு மூடிவிட வேண்டும். பாத்திரம் வைத்துள்ள அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கலவையை வேக வைக்க வேண்டும்.

கருப்பட்டியை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதே போன்று முந்திரி பருப்பினை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது மற்றொரு அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் பொடித்த கருப்பட்டியை போட்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அது முழுவதும் கரைந்த பின் அதனை இறக்க வேண்டும். கருப்பட்டி பாகினை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது திணை வேகும் போது கருப்பட்டி பாகினை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். கருப்பட்டி பாகினில் திணை முழுவதுமாக வெந்து வரும் போது நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளற விட வேண்டும். பின் திணையரிசி கருப்பட்டி பாகினில் நன்றாக இனைந்து வரும் போது ஏலக்காய்தூள் மற்றும் சுக்கு தூள் சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு பின் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். நெய் சூடான பின்பு, பொடித்து வைத்துள்ள முந்திரிபருப்பு மற்றும் உலர் திராட்சையை பொன்னிறமாக வறுத்து அதனை திணை கருப்பட்டி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறினால் திணை கருப்பட்டி பொங்கல் ரெடி!

click me!