வெறும் 5 நிமிடங்களில் ஹெல்த்தி பிரேக்பாஸ்ட் எக் பிரெட் மசாலா டோஸ்ட் செய்து சாப்பிடலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Jan 9, 2023, 1:01 PM IST

வாருங்கள்! ருசியான பிரட் முட்டை மசாலா டோஸ்டினை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 


தினமும் காலை உணவாக இட்லி,தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். அப்படிப்பட்ட சத்தான காலை உணவினை தான் இன்று நாம் காண உள்ளோம்.

ஹெல்த்தி பிரேக்பாஸ்ட்டுக்கு முட்டை பிரட் மசாலா டோஸ்ட் செய்து மட்டும் பாருங்க. இதனையே அடிக்கடி செய்து தரும்படி வீட்டில் உள்ள அனைவரும் கேட்பார்கள். இதனை பேச்சுலர்களும் மிக விரைவாக செய்து சாப்பிடலாம். இதனை செய்ய குறைந்த நேரம் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்வதால், காலை டிபனாகவும் அல்லது மாலை நேரத்தில் சிற்றுண்டியாகவும் செய்து சாப்பிடலாம்.

வாருங்கள்! ருசியான பிரட் முட்டை மசாலா டோஸ்டடினை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

  • முட்டை - 3
  • பிரெட் துண்டுகள் - 5
  • பெரிய வெங்காயம் -1
  • மல்லித் தழை - கையளவு
  • பச்சை மிளகாய் - 2
  • சில்லி ப்ளேக்ஸ் - ½ தேக்கரண்டி
  • மிளகு தூள் - ¾ தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
  • பட்டர் - 3 ஸ்பூன்

 இரவில் தூக்கம் வரவில்லையா? ஆழ்ந்த உறக்கம் வர வைக்கும் "MOON MILK''!

Latest Videos


செய்முறை :

முதலில் வெங்காயம்,மல்லித் தழை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக பீட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். முட்டையில் இப்போது பொடியாக அரிந்து வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்தாக முட்டையில் மிளகுத் தூள், சில்லி ப்ளேக்ஸ்,உப்பு மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து அனைத்தும் ஒன்றாக இனையும் படி மிக்ஸ் செய்துகொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அதில் சிறிது பட்டர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது பிரெட் துண்டு ஒன்றினை எடுத்து அதனை ரெடி செய்து வைத்துள்ள முட்டை கலவையில் டிப் செய்து தோசைக் கல்லில் போட வேண்டும்.

இப்போது அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து பிரட் முட்டையினை வேக விட வேண்டும். ஒரு புறம் பிரட் முட்டை வெந்த பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு சிறிது பட்டர் ஸ்ப்ரெட் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான்! ஈஸியான பிரட் முட்டை மசாலா டோஸ்ட் ரெடி!

click me!