உடல் எடையை குறைக்க உதவும் ஹெல்த்தி "அவகோடா பிரெட் டோஸ்ட் "

By Dinesh TGFirst Published Jan 13, 2023, 10:06 AM IST
Highlights

வாருங்கள்! ருசியான அவகோடா பிரெட் டோஸ்ட்டினை எப்படி செய்வது . என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



 

தினமும் வழக்கமாக சாப்பிடும் இட்லி,தோசை,பொங்கல்,பூரி என்று சாப்பிட்டு போர் அடிக்கிறதா? கொஞ்சம் புதுமையாக, சுலபமாக அதே நேரத்தில் ஆரோக்கியமாக ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். இன்று நாம் சட்டென்று எளிதில் செய்யக்கூடிய ஒரு காலை அல்லது மாலை நேர சிற்றுண்டி ரெசிபியை தான் காண உள்ளோம்.அவகேடோ பிரெட் டோஸ்ட் தான் இன்று நாம் பார்க்க உள்ளோம்.

இதனை மிக குறைந்த நேரத்தில் செய்து விடலாம்.விடலாம். தினமும் நாம் சாப்பிடுகின்ற இட்லி,தோசை போன்றவற்றிக்கு மாற்றாக இருக்கும். மேலும் இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ரெசிபியை ஆகும். உடல் எடையை குறைக்க விருப்புவோர் அவகோடா சேர்த்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ஒரு நல்ல சேஞ்சை குறுகிய காலத்தில் காணலாம்.

வாருங்கள்! ருசியான அவகோடா பிரெட் டோஸ்ட்டினை எப்படி செய்வது . என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

பிரெட் - 6
அவகேடோ - 2
ஸ்ப்ரிங் ஆனியன் - 2
தக்காளி-1
பச்சை மிளகாய் - 1
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
மல்லித் தழை - கையளவு
பட்டர்-1 ஸ்பூன்
சில்லி பிளேக்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு 

 இந்த பொங்கலுக்கு மணமணக்கும் மசாலா பொங்கல் செய்யலாம் வாங்க.

செய்முறை:

முதலில் ஸ்ப்ரிங் ஆனியன், மல்லித்தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை வட்ட வட்டமாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரிந்த அவகேடோ, ஸ்ப்ரிங் ஆனியன், பச்சை மிளகாய், மல்லித்தழை, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மசித்து கொள்ள வேண்டும்.

பிரட்டின் மீது பட்டர் வைத்து ஸ்ப்ரெட் செய்ய வேண்டும். அடுப்பில் ஒரு தோசைக் கல் வைத்து, சூடான பின் பிரெட் ஸ்லைஸ்களை வைத்து டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். டோஸ்ட் செய்த பிரெட்டின் மீது மசித்த கலவையைத் சேர்த்து ஸ்ப்ரெட் செய்து அதன் மேல் தக்காளி துண்டு வைத்து அதன் மேல் சில்லி பிளேக்ஸ் தூவி பரிமாறினால் அவகேடோ டோஸ்ட் ரெடி! நீங்களும் இந்த அவகோடா பிரெட் டோஸ்ட் ரெசிபியை ட்ரை செய்து பாருங்க!

click me!