வாருங்கள்! ருசியான வாழைத்தண்டு மோர் கூட்டினை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நாம் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள வேண்டுமெனில் தினமும் நாம் சாப்பிடும் உணவில் அதிக அளவிலான காய்கறிகளை எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகும். அந்த வகையில் இன்று நாம் நீர் சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான வாழைத் தண்டினை வைத்து சுவையான ஒரு கூட்டு ரெசிபியை தான் காண உள்ளோம்.
வாழைத்தண்டில் இரும்பு மற்றும் வைட்டமின் பி 6 சத்துக்கள் உள்ளதால் இரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவை அதிகரிக்க செய்யும். மேலும் இது உடல் எடையை குறைக்க வழிவகுக்கும். அது தவிர சிறுநீரக பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது. இன்னும் அதிக மருத்துவ நலன்களை அள்ளி தருகிறது.
வாருங்கள்! ருசியான வாழைத்தண்டு மோர் கூட்டினை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
அரைப்பதற்கு:
தாளிப்பதற்கு:
மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் " சில்லென்ற சிக்கன் சாலட் " எப்படி செய்வது! பார்க்கலாம் வாங்க!
செய்முறை :
முதலில் வாழைத்தண்டினை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பினை ஒரு குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் வைத்து வேகவைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வாழைத் தண்டு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
1 மிக்சி ஜாரில் பச்சை மிளகாய், சீரகம்,மல்லி மற்றும் தேங்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாழைத்தண்டு வெந்த பிறகு அதில் வேக வைத்து எடுத்துள்ள துவரம் பருப்பினை சேர்த்துக் கொண்டு பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அடுப்பை ஆஃப் செய்து விட்டு அதில் கெட்டி தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின் அதில் கடுகு, சீரகம், வெந்தயம், உளுந்தம் பருப்பு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்ததை வாழைத் தண்டு கலவையில் சேர்த்து கலந்து விட்டு பரிமாறினால் சுவையான வாழைத்தண்டு மோர் கூட்டு ரெடி!