வாருங்கள்! சில்லென்ற சிக்கன் சாலட்டை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அசைவ அனைவருக்கும் பிடித்தது என்றால் சந்தேகமில்லாமல் கூறலாம் அது சிக்கன் தான் . பொதுவாக சிக்கனை வைத்து கிரேவி,சூப், மசாலா, பிரியாணி என்று தான் நம்மில் அதிகமானோர் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இன்று நாம் சூப்பரான சுவையில் சிக்கன் வைத்து சாலட் ரெசிபியை காண உள்ளோம்.
பொதுவாக ஃப்ரூட் சாலட் , வெஜ் சாலட் , பயறு சாலட் போன்றவற்றை அதிகமாக செய்து இருப்போம். ஆனால் இன்று நாம் சிக்கன் வைத்து சில்லென்ற சுவையில் சூப்பரான சிக்கன் மயோனைஸ் சாலட் செய்யலாம். இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வாருங்கள்! சில்லென்ற சிக்கன் சாலட்டை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
இனி வீட்டிற்கு கெஸ்ட் வந்தால் ஆரஞ்சு வைத்து சூப்பரான டெஸெர்ட் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க!
செய்முறை :
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். சிக்கனை ஒரே அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் சிக்கனை சேர்த்து சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
சிக்கன் வெந்த பிறகு ஆஃப் செய்து அதனை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஸ்ப்ரிங் ஆனியனனை அரிந்து பட்டரில் பொரித்து எடுக்க வேண்டும். பின் வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரே அளவில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தாக ஆப்பிளையும், ஒரே அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். உலர் திராட்சையை இரண்டாக வெட்டி அதனையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு பெரிய பௌல் அல்லது தட்டில் வேகவைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டுக் கொண்டு அதன் மேல் பொரித்த ஸ்ப்ரிங் ஆனியன்,ஆப்பிள், மயோனைஸ் ,உலர் திராட்சை மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது கலவையில் சிறிது மிளகுத்தூள் ,உப்பு தூவி விட்டு அதன் மேல் இரண்டாக அரிந்த கருப்பு திராட்சை வைத்து அலங்கரித்து, ஃபிரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து குளிர செய்ய வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பிரிட்ஜில் இருந்து பரிமாறினால் சில்லென்ற சுவையில் சிக்கன் சாலட் ரெடி!