Soya Vada : ஆரோக்கியமான மீல்மேக்கர் வடை செய்யலாம் வாங்க !

By Dinesh TG  |  First Published Oct 21, 2022, 12:50 AM IST

மீள் மேக்கர் கொண்டு ஆரோக்கியமான வடையை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 


மீள் மேக்கரை நாம் பிரியாணி, புலாவில் சேர்த்து சாப்பிட்டு இருப்போம், மீள் மேக்கர் கிரேவி செய்து சாப்பிட்டு இருப்போம். பின் இதனை சேர்த்து கட்லட் செய்யவும் பயன்படுத்தி இருப்போம் .இன்று நாம் மீள் மேக்கர் சேர்த்து சுவையான வடை செய்ய உள்ளோம்.

ஒவ்வொரு வருடமும் நாம் தீபாவளி அல்லது வேறு பண்டிகை தினங்களில் பருப்பு வடை அல்லது மெது வடையை தான் அதிகமாக வீட்டில் செய்திருப்போம். இந்த முறை சற்று வித்தியாசமாக மீள் மேக்கர் கொண்டு ஆரோக்கியமான வடையை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Tap to resize

Latest Videos

மீள் மேக்கர் வடை செய்ய தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர்- 100 கிராம்
பொறி கடலை மாவு-1/2 கப் 
பொடியாக நறுக்கிய வெங்காயம் 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2 ஸ்பூன் 

Wheat Globe Jamoon : தீபாவளி ஸ்பெஷல்- கெஸ்ட்க்கு புது ஸ்னாக்ஸ் செய்வோமா?

கறி மசாலா - 1/2 ஸ்பூன் 
கரம் மசாலா- 1/2 ஸ்பூன் 
சீரகத்தூள்-1/2 ஸ்பூன் 
சோம்பு-1/2 ஸ்பூன் 
மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன் 
கார்ன் பிளார்- 1ஸ்பூன் 
புதினா- சிறிது 
கறிவேப்பிலை- சிறிது
கொத்தமல்லி- சிறிது 
எண்ணெய் தேவையான அளவு 
உப்பு தேவையான அளவு 

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து ,பொடியாக நறுக்கி வைத்துள்ள மீள் மேக்கரை சேர்த்து ஒரு 2 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின் அடுப்பில் இருந்து பாத்திரத்தை எடுத்து விட்டு , மீள் மேக்கரை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ள வேண்டும்.

இந்த தீபாவளிக்கு பாரம்பரியமான கருப்பட்டி சீனி மிட்டாய் செய்யலாம் வாங்க!

இப்போது ஒரு பௌலில் பொறி கடலை மாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அன்றாக கலாவேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், கார்ன் பிளார், கறி மசாலா, கரம் மசாலாமற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பின் அதில் சோம்பு, புதினா கொத்தமல்லி, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

இப்போது பௌலில் வேக வைத்துள்ள மீள் மேக்கரை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைய வேண்டும்.நன்றாக பிசைந்த பின்னர், அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பின்பு, கலவையை எடுத்து வடை போல் தட்டி வைத்து கொண்டு, கொத்திக்கும் எண்ணெயில் போட்டு,தீயை சிம்மில் வைத்து நன்றாக பொறித்து எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான மீள் மேக்கர் வடை ரெடி!

click me!