தீபாவளி ஸ்பெஷல்! நமது பாரம்பரிய பலகாரம் சுவையான சுசியம் செய்யலாம் வாங்க!

By Dinesh TGFirst Published Oct 20, 2022, 11:07 PM IST
Highlights

இந்த தீபாவளியில் பாரம்பரியமான இனிப்பு வகையை நம் வீட்டில் செய்து நமது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு செய்து கொடுத்து நமது அன்பினை வெளிப்படுத்தலாம் வாங்க.

என்ன தான் வெளியில் உள்ள கடைகளில் இருந்து பலகாரம் வாங்கி வந்து நமது ப்ரியமானவர்களுக்கு கொடுத்து சுவைத்தாலும் நமது கைகளால் செய்து தரும் பலகாரங்கள், நாம் அவர்கள் மீது வைத்துள்ள அன்பினை பலப்படுத்தும் . அந்த வகையில் இந்த தீபாவளிக்கு பாரம்பரிய இனிப்பான சுகியம் எப்படி நாம் வீட்டில் செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் . 

தேவையான பொருட்கள்

பூரணம் செய்வதற்கு:

கடலை பருப்பு 1 கப் 
வெல்லம் 1 கப் 
தண்ணீர் 1/2 கப் 
துருவிய தேங்காய் 1/2 முடி 
நெய் 2 ஸ்பூன் 

இந்த தீபவளிக்கு டபுள் லேயர் சாக்கோ பீனட் பர்ஃபி ! செய்யலாம் வாங்க!

சுசியம் செய்வதற்கு : 

அரிசி  1 கப் 
உளுந்த மாவு 1 டம்பளர் 
உப்புதேவையான அளவு 
எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை :

முதலில் ஒரு கிண்ணத்தில் இட்லி அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து,இரண்டு முதல் மூன்று முறை தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ள வேண்டும். பின் அதில் தண்ணீர் சேர்த்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் கடலை பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து முன்று விசில் வந்தவுடன் குக்கரில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு பருப்பை தனியாக எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து 2 சுற்று சுற்றவிட்டு கொரகொரவென்று அரைத்து விட வேண்டும். 

பின்பு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் வெல்லத்தை சேர்த்து , அதனுடன் தண்ணீர் சேர்த்து வெல்ல பாகு செய்து கொள்ள வேண்டும். பின்பு வெல்ல பாகினை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி வைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிது நெய் சேர்த்து கொண்டு, துருவிய தேங்காயையும் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

தீபாவளி ஸ்பெஷல் கேரட் லட்டு ஸ்வீட்!

தேங்காயை வறுக்கும் போது , மணம் வரும் வேளையில் , அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு மற்றும் வெல்ல பாகினை சேர்த்து கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு வரும் வரை கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.  பூரணமானது கெட்டியான பதத்திற்கு வந்த பிறகு, கடாயை கீழே இறக்கி ஆற வைத்துவிட்டு, சின்ன சின்ன உருண்டைகளாக கைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும்.

இப்போது நாம் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விட்டு , மிக்ஸி ஜாரில் போட்டு சிறுது தண்ணீர் ஊற்றி மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் மாவில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ,தீயை மிதமாக வைத்து , பூரண உருண்டையை அரிசி மாவில் டிப் செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான சுசியம் ரெடி!

click me!