தீபாவளி ஸ்பெஷல் கேரட் லட்டு ஸ்வீட்!

By Dinesh TGFirst Published Oct 19, 2022, 4:11 PM IST
Highlights

இந்த தீபாவளிக்கு கொஞ்சம் வித்தியாசமான பலகாரம் செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா?அதுவும் இனிப்பு பண்டத்தை செய்ய விரும்புகிறீர்களா? 
அப்படியெனில் கேரட் வைத்து லட்டு செய்யலாம் வாங்க !

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டுள்ளது .நாம் அனைவரும் தீபாவளி பண்டிகைக்காக ,வீட்டில் லிஸ்ட் போட்டு வெளியில் கடைகளில் இனிப்பு வகைகளை ஆர்டர் செய்து வாங்கி வருகின்றோம். 

இந்த தீபாவளிக்கு கொஞ்சம் வித்தியாசமான பலகாரம் செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா?அதுவும் இனிப்பு பண்டத்தை செய்ய விரும்புகிறீர்களா? 
அப்படியெனில் கேரட் வைத்து லட்டு செய்யலாம் வாங்க ! 

இந்த கேரட் லட்டு செய்வது மிக எளிது மற்றும் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் சுவையாக இருக்கும் . இந்த தீபாவளிக்கு கேரட் லட்டு செய்து நமது அன்பானவர்களுக்கு கொடுத்து அன்பை மெருகேற்றி மேலும் ஆரோக்கியத்தை பரிசாக அளியுங்கள் .கேரட் லட்டு ரெசிபியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் . 

Badusha Sweet : இந்த தீபாவளிக்கு தித்திப்பான பாதுஷா செய்யலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - 1 கப் 
கண்டென்ஸ்டு மில்க் - 1/3 கப் 
நெய் - 1 ஸ்பூன் 
பிஸ்தா - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது )

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு வாயகன்ற கடாயை வைத்து, அதில் அரை ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். நெய் உருகிய உடன் , துருவிய கேரட்டை சேர்க்க வேண்டும். பின் அடுப்பின் தீயை குறைவாக வைத்து வதக்க வேண்டும். 

தீபாவளி அன்று சூப்பரான டூ இன் ஒன் மட்டன் குழம்பு செய்வோமா?

5 முதல் 7நிமிடங்களில் கேரட் சுருங்கி, அதில் உள்ள பச்சை வாசனை போகும் வரை குறைவான தீயில் வைத்து வதக்கி விட வேண்டும்.  கேரட்டின் வாசனை சென்று, நன்கு சுண்டி வரும் போது ,அதில் கண்டென்ஸ்டு மில்க் ஊற்ற வேண்டும்.பின் இரண்டும் ஓட்டும் பதம் வரும் வரை கை விடாமல் தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும். 

கேரட் நன்கு வேகும் வரை தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும். கேரட் நன்கு வெந்த பிறகு, அதில் மீதமிருக்கும் நெய் சேர்த்து,கெட்டியாகும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும். கெட்டியாக மாறிய பின் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ,சற்று ஆற விட வேண்டும். கலவையானது கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும் போது நமது கைகளால் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் உருண்டைகளின் மீது பொடியாக நறுக்கி வைத்துள்ள பிஸ்தாவை தூவி விட வேண்டும். இப்போது அருமையான, தித்திப்பான கேரட் லட்டு தயார்.! இந்த தீபாவளி அன்று இந்த சுவையான கேரட் லட்டு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து தீபாவளியை கொண்டாடுங்கள் . 

click me!