"ஆனியன் சூப்" சாப்பிட்டு நோய்களை விரட்டி அடியுங்கள்

By Dinesh TG  |  First Published Nov 13, 2022, 1:31 PM IST

மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான ஆனியன் சூப் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 
 


தமிழகத்தில் மழைக்காலம் ஆரம்பித்து, பல இடங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது, மழைக்காலங்களில் பெரும்பாலானோருக்கு சளி, இருமல், ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவர். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இதன் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படும்.

இந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தாலே போதும், நம்மால் பாதி பிரச்சனைகளை எளிதாக எதிர்கொள்ள முடியும். அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்க உதவும் ஆனியன் வைத்து ஒரு ரெசிபியை இன்று நாம் காண உள்ளோம்.

Tap to resize

Latest Videos

இந்த ரெசிபியானது மழைக்காலத்திற்கு ஏற்ற மற்றும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ரெசிபி ஆகும்.ஆனியனில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி, நிறைந்து காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை பெற்றது. 

வாங்க! மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான ஆனியன் சூப் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் – 4
முதல் தேங்காய்ப்பால் – 1/2 கப் 
பூண்டுப் பற்கள் – 4
பச்சை மிளகாய் – 2 
பட்டர்- 1 ஸ்பூன் 
மிளகுத் தூள் – 1 ஸ்பூன் உள்ள வடிகட்டிய கரைசலில் 
பட்டை தூள்-1/4 ஸ்பூன் 
கிராம்பு தூள்-1/4 ஸ்பூன் 
நசுக்கிய சோம்பு 1/4 ஸ்பூன் 
கார்ன் பிளார்-1 ஸ்பூன் 
மல்லித் தழை – கையளவு
உப்பு – தேவையான அளவு

Caramel Paysam : வெறும் 10 நிமிடத்தில் சட்டென்று செய்யக்கூடிய கேரமல் பாயசம் ! வாங்க செய்யலாம்

செய்முறை: 

முதலில் வெங்காயத்தை மிக பொடியாக அரிந்துக் கொண்டு ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு, பின் பச்சை மிளகாய் மற்றும் மல்லித்தழையையும் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சிறிது பட்டர் சேர்த்து, பட்டர் உருகிய பின்,பொடியாக அரிந்து வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி கொண்டு ,பின் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். 

அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர், 3 கப் தண்ணீர் சேர்த்துக் கொண்டு, அதில் பட்டைத் தூள், நசுக்கிய சோம்பு, கிராம்புத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொண்டு வேக வைக்க வேண்டும். 

ஒரு கிண்ணத்தில் சிறிது சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.துருவிய தேங்காயை மிக்சி ஜாரில் சேர்த்து, தேங்காய்ப் பால் எடுத்து மற்றொரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது கடாயில் உள்ள அனைத்தும் நன்றாக வெந்த பிறகு, சிறிது நேரம் ஆற வைத்து விட்டு, மிக்சி ஜாரில் போட்டு அரைத்து, வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது இதில் மிளகுத்தூள்,கரைத்த சோள மாவு கரைசல் ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.கொதிக்கும் போது, தேங்காய்ப்பாலை சிறுக சிறுக ஊற்றி, கலந்து விட்டு, கொதிக்க வைக்க வேண்டும். 

கொதித்து நன்கு வாசனை வரும் போது, மல்லித்தழையைத் தூவி இறக்கினால் சூப்பரான ஆனியன் சூப் ரெடி! ஆனியன் சூப் குடித்து நோய்களை விரட்டி அடியுங்கள். 

click me!