இன்றைய அவசர உலகத்தில் அனைவரும் அயராது உழைத்து கொண்டு இருக்கிறோம். நம் உடல் மற்றும் மனதின் சரியான செயல்பாட்டிற்கு இரவில் ஒரு நல்ல தூக்கம் அவசியம். சராசரியாக மனிதன் 7 முதல் 8 மணிநேர தூங்க வேண்டும் . ஆனால் நாள் முழுவதும் நன்றாக உழைத்து ஓடி திரிந்து அலைந்த பின் இரவில் மிகுந்த சோர்வுடன் படுக்கைக்கு செல்லும் போது மனஅழுத்ததுடன் இருப்பதால் தூக்கம் வராமல் அவதிப்படுகின்றோம். சரியான தூக்கம் இல்லாத போது பல உடல் பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகிறது . நல்ல தூக்கம் பெற வரப்பிரசாதம் தான் இந்த "மூன் மில்க்"
மூன் மில்க்கின் நன்மைகள்
இந்த மூன் மிளகை தினமும் குடித்து வந்தால் நல்ல ஞபாக திறன் வளரும். மேலும் ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும். உடல் வீக்கத்தை குறைக்கும். மேலும் இந்த பானம் உண்ணும் உணவை விரைவில் செரிமானம் செய்ய உதவும். வாங்க இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1 கிளாஸ் - பால்
ஒரு சிட்டிகை - ஜாதிக்காய் தூள்
ஒரு சிட்டிகை- ஏலக்காய் தூள்
1/2 - டீஸ்பூன்-மஞ்சள் தூள்
1/2 டீஸ்பூன்- அஸ்வகந்த தூள்
1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
தேவைக்கேற்ப தேன்
Wheat Noodles : குழந்தைகளுக்கான ஹெல்த்தியான டேஸ்ட்டியான ''கோதுமை நூடுல்ஸ்''!
செய்முறை
முதலில், 1 கிளாஸ் பாலை எடுத்துக் கொண்டு அதனுடன் அஸ்வகந்தா, மஞ்சள் தூள், ஜாதிக்காய் தூள் மற்றும் ஏலக்காய் தூள் ஆகிவற்றை சேர்க்கவும்.
இந்த பாலை மிதமாக சூடு செய்யவும். 5-10 நிமிடங்கள் இந்த மசாலா பொருள்கள் சிறிது ஊற வேண்டும். பின் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும். பின் இதனுடன் சுவைக்கேற்ப தேன் கலந்து குடிக்க வேண்டும்
Kids Snacks : களைப்பாக வரும் குழந்தைகளுக்கு ஸ்வீட்டான ஸ்நாக்ஸ் ''பீநட் பட்டர் மஃபின்ஸ்''!!