கறி குழம்பு சுவையை மிஞ்சும் மீல் மேக்கர் கிரேவி !

By Dinesh TG  |  First Published Sep 17, 2022, 1:02 AM IST

நான் வெஜ் டேஸ்டேக்கு இணையான மீல் மேக்கர் கிரேவி. கறி வாங்கி பண்ண முடியாத நாட்களில் இந்த மீல் மேக்கர் கிரேவி செய்து பாருங்க. இதனை சப்பாத்தி , பூரி, பரோட்டா, வெஜ் பிரியாணி என அனைத்திற்க்கும் நல்ல ஒரு கிரேவியா இருக்கும்.
 


தேவையான பொருட்கள்:

1 கப் மீல் மேக்கர்

ஒரு சில்லு தேங்காய்

Latest Videos

undefined

இஞ்சி சிறிய துண்டு

8 பல் பூண்டு

3 கிராம்பு

கொஞ்சம் கடல் பாசி

1 ஸ்பூன் சோம்பு

1 நட்சத்திர சோம்பு

2 பட்டை

1 பிரியாணி இலை

1 வெங்காயம்

1 பெரிய தக்காளி

1 ஸ்பூன் மிளகாய் தூள்

1 ஸ்பூன் தனியா தூள்

1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்

1/4 ஸ்பூன் சீரக தூள்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு எண்ணெய்



செய்முறை :

மிக்ஸியில் தேங்காய் , இஞ்சி, பூண்டு, கிராம்பு, கடல் பாசி, சோம்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சூடான தண்ணீரில் மீல் மேக்கரை போட்டு 2 நிமிடம் கழித்து தண்ணீரை வடி கட்டி கொள்ள வேண்டும்.

இட்லி தோசைக்கு மாற்றாக ஹெல்த்தியான பிரேக் பாஸ்ட்! இப்படி செஞ்சு பாருங்க. கொஞ்சம் கூட மீதம் இருக்காது.

பின்பு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்த உடன் அதில் நட்சத்திர சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து வறுக்க வேண்டும். பின் வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கிய பின்பு , அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி கொள்ள வேண்டும்.

சுள்ளுன்னு ஆளை இழுக்கும் சட்டி மீன் குழம்பு !

இதனோடு மிளகாய் தூள் , தனியா தூள், கரம் மசாலா தூள், சீரக தூள் சேர்த்து வதக்க வேண்டும். 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் வடிகட்டின மீல் மேக்கரை சேர்த்து நன்கு கிளறி 20 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு மல்லி தழையை சேர்த்தால் போதும். சுவையான மீல் மேக்கர் கிரேவி ரெடி!
 

click me!