ரோட்டு கடை இட்லி தோசை குருமா! இப்படி குருமா வச்சு பாருங்க. 10 இட்லி கூட சாப்பிடலாம்!

By Dinesh TGFirst Published Sep 17, 2022, 12:29 AM IST
Highlights

பொதுவாவே இட்லி, தோசை வீட்டுல செஞ்சு சாப்பிட்டாலும், வெளியே ரோட்டுகடையில சாப்பிடுற டேஸ்ட் எப்பவுமே தனிதான். அந்த டேஸ்ட்டுல இட்லி தோசை குருமா எப்படி வீட்டுலயே செய்றதுன்னு இந்த பதிவில பார்க்கலாம்.
 

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் 1

6 பல் பூண்டு

இஞ்சி சிறிய துண்டு

4 முதல் 5 பச்சை மிளகாய்

சோம்பு 1 ஸ்பூன்

6 முந்திரி

துருவிய தேங்காய்

2 பட்டை

5 கிராம்பு

1 நட்சத்திர சோம்பு

கொஞ்சம் கல் பாசி

2 பிரியாணி இலை

2 தக்காளி

1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்

2 ஸ்பூன் தனியா தூள்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

மிகச் சிறந்த காலை உணவு நீராகாரம்: ஏன் தெரியுமா?

செய்முறை 

கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த உடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி விட வேண்டும், வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி , பூண்டு , பச்சை மிளகாய் , சோம்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது தேங்காய் மற்றும் முந்திரியை சேர்த்து 3 நிமிடங்கள் வரை வதக்கி விட வேண்டும் . பின்பு இந்த கலவையை ஆற வைக்க வேண்டும். ஆறிய கலவையை மிக்ஸியில் போட்டு சிறிதளவு நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

Chukka varuval : நாவை சுண்டி இழுக்கும் நாட்டு கோழி சுக்கா!

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு, நட்சத்திர சோம்பு, கல் பாசி, பிரியாணி இலையை போட்டு நன்கு பெரிய வைக்க வேண்டும் . பின் இதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும் . தேவையான அளவு உப்பை சேர்க்கவும். நன்கு வதங்கிய உடன் மஞ்சள் தூள் , தனியா தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

இதனுடன் இப்போது அரைத்த விழுதை சேர்த்து 2 முதல் 3 கிளாஸ் தண்ணீர் சேர்த்து 10 முதல் 12 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும் . இப்போது மல்லி தழை சேர்க்க வேண்டும். அவ்ளோதாங்க ரோட்டு கடை குருமா ரெடி!

click me!