நாட்டுக்கோழியானது உடல் சூட்டை தணிக்கும். மேலும் தசைகளுக்கு தெம்பை கொடுக்கும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும், சுவாச நோய்களுக்கும் நாட்டுக்கோழியானது சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வாங்க இன்னைக்கு நாட்டுக்கோழி சுக்கா எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம் .
கிராமங்களில் இன்றும் நாட்டுக்கோழியை தான் அதிகஅளவில் விரும்பி சாப்பிடுவர். நாட்டுக்கோழி பல விதமான நன்மைகளை உடலுக்கு தருகிறது குறிப்பாக நாட்டுக்கோழியானது உடல் சூட்டை தணிக்கும். மேலும் தசைகளுக்கு தெம்பை கொடுக்கும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும், சுவாச நோய்களுக்கும் நாட்டுக்கோழியானது சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வாங்க இன்னைக்கு நாட்டுக்கோழி சுக்கா எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம் .
தேவையான பொருள்கள்
1/2 கிலோ- நாட்டுக்கோழி
150 கிராம்- சின்ன வெங்காயம்
1 ஸ்பூன் - மிளகு
1 ஸ்பூன் சீரகம்
1 ஸ்பூன்- இஞ்சி பூண்டு பேஸ்ட்
1 ஸ்பூன்- தனியா தூள்
1 ஸ்பூன்-மிளகாய் தூள்
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பிஸ்பூன் கரம் மசாலா தூள்
நல்ல எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
1 ஸ்பூன்- கசகசா
5- முந்திரிபருப்பு
2- பட்டை
2- கிராம்பு
தேங்காய் துருவியது 3 ஸ்பூன்
இப்போ எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க !
செய்யும் விதம்: அடுப்பை பற்ற வைத்து கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கிராம்பு மற்றும் பட்டை போட்டு தாளிக்கவும். பின் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்று வதங்கிய உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும் . இஞ்சிபூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசனை செல்லும் வரை நன்கு வதக்கி விடவும்.
மிகச் சிறந்த காலை உணவு நீராகாரம்: ஏன் தெரியுமா?
பின்பு நாட்டுக் கோழி கறியை சேர்த்து சுமார் 5 நிமிடம் வதக்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து எடுத்து வைத்துள்ள மிளகாய் தூள், கரம்மசாலா தூள், தனியா தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 கிளாஸ் நீரை ஊற்றி நாட்டுக்கோழியை மூடி போட்டு சுமார் 20 நிமிடங்கள் வேக விட வேண்டும். பின் அதில் அரைத்த மிளகு- சீரகம்-முந்திரி- தேங்காய்- கசகசா பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நாட்டு கோழி குழம்பு தானே இருக்கு.. அதென்ன ''நாட்டுகோழி ரசம்'' செய்யலாம் வாங்க!
இப்போது இதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பிரட்டி எடுக்க வேண்டும். கலவை சுண்டியவுடன், நறுக்கிய மல்லி தழையை சேர்த்தால் கம கம வாசனையுடன் நாவை சுண்டி இழுக்கும் நாட்டுக் கோழி சுக்கா ரெடி