Crab Cutlet : நா ஊறும் நண்டு கட்லெட்!

By Dinesh TGFirst Published Sep 16, 2022, 12:09 PM IST
Highlights

நா ஊரும் நண்டு கட்லெட். வீட்டில் இருக்கும் சின்ன குழந்தைங்க முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நண்டு கட்லெட் எப்படி செய்யலாம்னு பார்க்கலாமா?
 

நண்டின் பயன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க

இரத்த சோகையை தடுக்கவும், முடக்கு வாதத்தில் இருந்து விடுபடவும், வலிமையான எலும்புகளை பெறவும், முகப்பருக்கள் ஏற்படுவதை தடுக்கும், கொழுப்பு அளவை குறைக்கும். இவ்வளவு நன்மைகள் உள்ள நண்டில் இன்று நாம் பார்க்க போவது நண்டு கட்லெட் .

தேவையான பொருட்கள்

நண்டு 1/4 கிலோ (சுத்தம் செய்தது )

1 பெரிய வெங்காயம்

2 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)

1/2 ஸ்பூன் மஞ்சள்பொடி 

1 ஸ்பூன் மிளகாய் பொடி

1/2 ஸ்பூன் கரம் மசாலா பொடி

1 உருளை கிழங்கு (வேக வைத்தது)

மல்லி இலை சிறிதளவு (பொடியாக நறுக்கியது )

மைதா 2 ஸ்பூன்

பிரட் தூள் சிறிதளவு

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

முதலில், நண்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் . பின்பு வேக வைத்து உடைத்து சதையை மட்டும் தனியாக எடுத்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும் .

கர்ப்பிணிப் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் '''ஈரல் வறுவல்''!!

எண்ணெய் நன்றாக சூடான பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்பு அதில் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி விடவும். இரண்டும் நன்று வதங்கிய பின்பு, வேக வைத்த நண்டை சேர்த்து கிளறி விடவும் .இப்பொழுது 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் , 1 ஸ்பூன் மிளகாய் தாள் , 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி விடவும். இப்பொழுது தேவையான உப்பை சேர்த்து கிளறி விட வேண்டும்.பின்பு அடுப்பை ஆப் செய்து விட்டு இதனுடன்
வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளை கிழங்கு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக கலக்கி விடவும் .

Saffron Benefits : சிவப்பு தங்கம் ''குங்கும்ப்பூ''-வின் நன்மைகள் Vs தீமைகள்!

நண்டு கலவையைச் சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டிக் கொள்ள வேண்டும் . மைதா மாவில் கொஞ்சம் உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் . தட்டி வைத்துள்ள நண்டு கலவையை, மைதா மாவு கரைசலில் நனைத்து, ப்ரெட் தூளில் பிரட்டி வைக்கவும். பிறகு அவற்றைச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சூடான நண்டு கட்லெட் ரெடி. சாஸுடன் சேர்த்து பரிமாறவும்.

click me!