இட்லி தோசைக்கு மாற்றாக ஹெல்த்தியான பிரேக் பாஸ்ட்! இப்படி செஞ்சு பாருங்க. கொஞ்சம் கூட மீதம் இருக்காது.

By Dinesh TG  |  First Published Sep 15, 2022, 9:16 PM IST

என்ன டிஷ்ஷா இருக்கும்ன்னு யோசிக்கறீங்களா? ஈஸியா ஆனா ஹெல்த்தியான கோதுமை ரவா பொங்கல் தாங்க இன்னைக்கு நாம பாக்க போறோம் .
 


கோதுமை ரவையின் பயன்கள்

உடல் எடையை குறைக்கவும், உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைத்து வெளியேற்றவும், எலும்புகள் வலு பெறவும் , இதய ஆரோக்கியத்திற்கும் , சக்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்க்கொள்ளவும் கோதுமை ரவா பயன்படுகிறது. இவ்ளோ நன்மைகள் உள்ள கோதுமை ரவையை வைத்து நாம இன்னைக்கு பொங்கல் செய்ய போறோம். தேவையான பொருட்கள் என்னன்னு பார்க்கலாம் வாங்க .

தேவையான பொருட்கள்

கோதுமை ரவா 3/4 கப்
பாசி பருப்பு 1/4 கப்
தண்ணீர் 3 கப்
நெய் தேவையான அளவு
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 1
இஞ்சி சிறிய துண்டு ( பொடியாக நறுக்கியது )
முந்திரி பருப்பு 20 கி
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையான அளவு

இப்போ எப்படி செய்யலாம்ன்னு பார்க்கலாம்

செய்முறை : பாசி பருப்பை நன்கு நீரில் கழுவி பின் அதனை நீர் இல்லாமல் வடைகட்டிக் கொள்ள வேண்டும் . அடுப்பை பற்ற வைத்து பானில் 1 ஸ்பூன் நெய் விடவும். நெய் காய்ந்த உடன் அதில் கோதுமை ரவா மற்றும் எடுத்து வைத்துள்ள பாசிப்பருப்பையும் சேர்த்து, இரண்டையும் மிதமான சூட்டில் கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது குக்கரில் வறுத்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து 3 கப் தன்னீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை காத்து இருக்கவும். பின்பு குக்கரை இறக்கி வைத்து விட்டு 5 நிமிடங்கள் கழித்து திறக்கவும்.

Tap to resize

Latest Videos

இப்போது அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் 3 ஸ்பூன் நெய் விட்டு மிளகு , சீரகம், பச்சை மிளகாய் , இஞ்சி , முந்திரி பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் . தாளித்ததை குக்கரில் உள்ள கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். அவ்ளோதாங்க மணக்க மணக்க ,ருசியான மற்றும் சத்தான கோதுமை ரவா பொங்கல் ரெடி... குழந்தைங்க முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சிற்றுண்டி கோதுமை ரவா பொங்கல் ... செய்து பாருங்க . உங்களுக்கும் நிச்சயமாக பிடிக்கும்.
 

click me!