
மஃபின்ஸ் செய்ய தேவையான பொருட்கள்
கேக் மாவு 150 கிராம்
பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன்
வெண்ணெய் 110 கிராம்
சர்க்கரை 200 கிராம்
பீநட் பட்டர் 4 ஸ்பூன்
முட்டை - 2
வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்
பால் 80 மி.லி
செய்முறை
மைக்கோவேவ் ஓவனை முன்னதாகவே 180 டிகிரி செல்சியஸுக்கு சூடாக்க வேண்டும். கப்கேக் மோல்டில் எண்ணெயை பூசி வைத்துக்கொள்ள வேண்டும். இதனிடையே, கேக் மாவையும், பேக்கிங் பவுடரையும் ஒன்றாக கலந்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக திக்காகும் வரை அடித்து கலக்க வேண்டும். அதனுடன், பீநட் பட்டரையும் சேர்த்து மீண்டும் நன்றாக அடித்து கலக்க வேண்டும்.
பின்னர், அந்த கலவையுடன் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். நிறம் மற்றும் வாசனைக்காக வணில்லா எசன்ஸை கலக்கவும். இல்லையென்றால் பால் அல்லது மாவை சேர்க்கலாம்.
இறுதியாக, இந்த கலவையை கப்கேக் மோல்டில் ஊற்றவும். சுமார் 20 அல்லது 25 நிமிடங்கள் வரை மைக்கோவேவ் ஓவனில் பேக் செய்து இறக்கினார் பீநட் பட்டர் மஃபின்ஸ் ரெடி. இதனை, சூடாகவோ, சில்லென்றோ பரிமாறலாம், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.