கர்ப்பிணிப் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் '''ஈரல் வறுவல்''!!

By Dinesh TG  |  First Published Sep 14, 2022, 11:27 PM IST

கர்ப்பிணிகள் ஆட்டு ஈரல் சாப்பிடுவதால், கர்ப்ப காலங்களில் ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கச்செய்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆரோக்கிய வாழ்வை அளிக்கிறது. இப்போது, மதுரை ஈரல் வறுவலை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்தப் பதிவில் காணலாம்.
 
தேவையான பொருட்கள்

ஆட்டு ஈரல் - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 12

தக்காளி -1

தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கைப்பிடி

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

கரம் மசாலா - 1/4 ஸ்பூன்

சோம்பு - 1/2 ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

தேவையான அளவு எண்ணெய்

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

ஒரு சிறய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு சேர்த்து தாளித்ததும், பொடியாக வெட்டிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் பொடியாக வெட்டிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் பொடி வகைகளை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

அறுசுவையும் கலந்த ''தேங்காய்ப்பால் மீன் குழம்பு'' செய்வது எப்படி?

அதனுடன் ஈரலை சேர்த்து 2 நிமிடம் வரை நன்றாக மீண்டும் வதக்க வேண்டும். ஈரல் வதங்கியதும் தேவைக்கேற்ப தண்ணீர், உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு சிறு தீயில் கொஞ்சநேரம் வேக வைக்க வேண்டும்.

ஈரல் வெந்து தண்ணீர் வற்றியதும் தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் வரை கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவைத்தால் சுவையான மதுரை ஈரல் வறுவல் ரெடி.

Tap to resize

Latest Videos

click me!