நூடுல்ஸ், ஃபிரைடுரைஸ் போன்ற துரித உணவுவகைகள் என்றுமே உடலுக்கு கெடுதியை தரும். ஆனால் அவைகளே குழந்தைகளின் விருப்பமாகவும் இருக்கும். அதற்கு மாறாக இனி குழந்தைங்க நூடுல்ஸ் கேட்டா 1 கப் கோதுமை மாவில் வீட்டீலேயே செய்து குடுங்க! ஹெல்த்தியான டேஸ்ட்டியான கோதுமை நூடுல்ஸ் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருள்கள்
1 கப் கோதுமை மாவு
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு தண்ணீர்
வெங்காயம் 1 ( மெல்லிதாக நறுக்கியது)
கேரட் 1 ( மெல்லிதாக நறுக்கியது)
முட்டை கோஸ் 1 ( மெல்லிதாக நறுக்கியது)
குடை மிளகாய் 1 ( மெல்லிதாக நறுக்கியது)
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
1 ஸ்பூன் சோயா சாஸ்
2 ஸ்பூன் டோ மேட்டோ கெட்சப்
சோயா சாஸ்
கர்ப்பிணிப் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் '''ஈரல் வறுவல்''!!
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவு , சிறிது உப்பு , சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு சிறிதாக சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவின் பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும் . இப்போது இந்த மாவை கொஞ்சம் எடுத்து முறுக்கு அச்சில் வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்த உடன் , அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும் . பின் முறுக்கு குழலில் உள்ள மாவை கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சம் பிழிந்து விட வேண்டும் . இப்போது அடுப்பை அதிக சூட்டில் வைத்து கோதுமை நூடுல்ஸை 5 நிமிடங்கள் நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் அதனை நீர் இல்லாமல் வடிகட்டி கொள்ள வேண்டும் . அதன் பின் கோதுமை நூடுல்ஸை குளிர்ந்த நீரில் போட வேண்டும். இதே மாதிரி அனைத்து மாவினையும் இவ்வாறு வேண்டும்.
கறி குழம்பு சுவையை மிஞ்சும் மீல் மேக்கர் கிரேவி !
பின்னர் குளிர்ந்த நீரில் உள்ள நூடுல்ஸை நீர் இல்லாமல் வடி கட்டி கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த உடன் வெங்காயம் கேரட் முட்டை கோஸ் குடை மிளகாய் போட்டு 1/ 2 வேகாட்டில் வேக வைக்க வேண்டும். சிறிது உப்பு, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்,1 ஸ்பூன் சோயா சாஸ் , 2 ஸ்பூன் டோ மேட்டோ கெட்சப் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கலக்கி விட வேண்டும். இப்போது இதனுடன் நூடுல்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கிளற வேண்டும். அவ்ளோதாங்க ஹெல்த்தியான டேஸ்டான கோதுமை நூடுல்ஸ் வீட்டிலேயே ரெடி பண்ணிடலாம் .