கமகம வாசனையில் ஆளை தூக்கும் காடை பெப்பர் ஃப்ரை ! நீங்களும் ஒரு முறை ட்ரை செய்து பாருங்க!

By Asianet Tamil  |  First Published Mar 16, 2023, 6:07 AM IST

வாருங்கள்! கமகமக்கும் காடை பெப்பர் மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


நம்மில் அநேகமானோர் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் அசைவ உணவுகளை தான் பெரிதும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அப்படி அசைவ வகைகளில் ஒன்றான காடையில் குறைந்தஅளவில் கொழுப்பு இருப்பதால் அசைவ பிரியர்களுக்கு ஏற்ற ஒரு உணவு என்று கூறலாம்.

அந்த வகையில் இன்று நாம் காடை வைத்து காடை பெப்பர் மசாலா ரெசிபியை வீட்டில் வெகு சுலபமாக செய்து விடலாம். இதனை செய்வது மிகவும் எளிது .மேலும் இதனை குழந்தைகள்,பெரியவர்கள் எண்டு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும் .

எப்போதும் சிக்கன், மட்டன் என்று சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு இதனை ஒரு முறை செய்து கொடுங்கள். பின் இதனை மட்டும் தான் செய்து தர வேண்டும் என்று அனைவரும் கூறும் அளவிற்கு இதன் சுவை மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

வாருங்கள்! கமகமக்கும் காடை பெப்பர் மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :
காடை -3
பெரிய வெங்காயம் -1
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/2 ஸ்பூன்
கரம் மசாலா-1 ஸ்பூன்
தயிர்-1 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
மல்லி தூள்-1 ஸ்பூன்
மிளகுத் தூள்-1 ஸ்பூன்
மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
புதினா-சிறிது
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

இப்படி பாலக் மட்டன் தொக்கு செய்து கொடுத்தால் பத்தவே பத்தாது!

செய்முறை :

முதலில் காடையை சுத்தம் செய்து நன்றாக அலசி அதன்மேல் சிறிது மஞ்சள் தூள், உப்பு மற்றும் தயிர் சுமார் 1 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
1 மணி நேரத்திற்கு பிறகு, காடையை மீண்டும் அலசிக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் மல்லித்தழையை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கி விட வேண்டும்.

இப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்தாக க அதில் சிறிது மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும். இப்போது காடையை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின் தனியாதூள், மிளகாய் தூள்,மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

காடையில் அனைத்து மசாலாவும் நன்கு சேருமாறு சுமார் 5 நிமிடங்கள் வரை நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கடாயினை ஒரு தட்டு போட்டு மூடி சுமார் 15 நிமிடங்கள் வரை தீயினை சிம்மில் வைத்து காடையை வேக வைக்க வேண்டும். அவ்வப்போது மூடியை திறந்து கிளறி கொண்டே இருத்தல் வேண்டும். தண்ணீர் வற்றி சுண்டி வரும் வரை வேக விட்டு இறுதியாக பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறனால் அட்டகாசமான காடை பெப்பர் ஃப்ரை ரெடி!

Latest Videos

click me!