ஆந்திராவின் ஸ்பைசி சிக்கன் பிரை சாப்பிட்டு இருக்கீங்களா?

By Dinesh TG  |  First Published Sep 17, 2022, 3:46 PM IST

காரசாரமான  உணவுகள்  என்றால் அது ஆந்திரா உணவுகள் தாங்க. ஆந்திரா உணவு என்றாலே ஹைதராபாத் பிரியாணி தான் முதலில் சொல்லுவோம். பிரியாணிக்கு சூப்பரான  ஸ்டார்டர்  மற்றும் காம்பினேஷன்ன்னா அது சிக்கன் தானே.  வாங்க இன்னைக்கு நாம ஆந்திரா ஸ்டைல்  ஸ்பைசி சிக்கன் பிரை எப்படி பண்ணலாம் என்று பார்ப்போம். 
 


காரசாரமான  உணவுகள்  என்றால் அது ஆந்திரா உணவுகள் தாங்க. ஆந்திரா உணவு என்றாலே ஹைதராபாத் பிரியாணி தான் முதலில் சொல்லுவோம். பிரியாணிக்கு சூப்பரான  ஸ்டார்டர்  மற்றும் காம்பினேஷன்ன்னா அது சிக்கன் தானே.  வாங்க இன்னைக்கு நாம ஆந்திரா ஸ்டைல்  ஸ்பைசி சிக்கன் பிரை எப்படி பண்ணலாம் என்று பார்ப்போம். 

சிக்கனில்  அதிக அளவு புரதங்கள் உள்ளது. இது  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் , குழந்தைகளின் வளர்ச்சிக்கு  முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும்  தசைகளை வலுவடை  செய்யும் , பசியை தூண்டும், மற்றும்  இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது .இப்படி எண்ணில் அடங்கா நன்மைகளை கொண்டுளள்து இந்த  சிக்கன். 

Latest Videos

undefined

சரிங்க , இப்போ நாம் இன்றைய ஸ்பெஷல் ஆந்திரா ஸ்பைசி சிக்கன் பிரை எப்படி செய்யலாம் என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க. 

தேவையான பொருட்கள் :

போன்லெஸ் சிக்கன் - 1/2  கிலோ 

நல்ல எண்ணெய்  150 மில்லி 

பெரிய   வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 1/2 ஸ்பூன் 

காஷ்மீரி சில்லி பவுடர் - 2 ஸ்பூன் 

தண்ணீர் -1/2 கப் 

பச்சை மிளகாய் -3  

லெமன் ஜூஸ் 1/2 ஸ்பூன்  

கருவேப்பிலை ஒரு கொத்து 

மல்லி தழை பொடியாக நறுக்கியது

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் 

தேவையான அளவு உப்பு

Kids Snacks : களைப்பாக வரும் குழந்தைகளுக்கு ஸ்வீட்டான ஸ்நாக்ஸ் ''பீநட் பட்டர் மஃபின்ஸ்''!!

செய்முறை:  

சிக்கனை நன்கு கழுவிய  பின்பு சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சுமார் 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் . பின்பு ஒரு கடாயில்  நல்லெண்ணெய் ஊற்றி ,எண்ணெய்சூடான  உடன் அதில் மெல்லிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்,

கறி குழம்பு சுவையை மிஞ்சும் மீல் மேக்கர் கிரேவி !

வெங்காயம் நன்கு வதங்கிய பின்  இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை செல்லும் வரை  மீண்டும் வதக்க வேண்டும். பின்பு  ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அதன்பின்  காஷ்மீரி  சில்லி பவுடர், உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

அடுத்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளற வேண்டும் . இந்த தண்ணீர் வற்றும் வரை சிக்கனை கிளறி விட  வேண்டும் . பின்பு அடுப்பை ஆப் செய்து விட்டு  லெமன் ஜூஸ், பச்சை மிளகாய் , மல்லி தழை மற்றும் கருவேப்பிலை சேர்த்து விட வேண்டும்.  அவ்ளோதாங்க. கார சாரமான ஆந்திரா ஸ்பைசி சிக்கன் பிரை ரெடி... 

click me!