காலையில் ஒருமுறை இப்படி முட்டையை வைத்து டேஸ்டான டிபன் செய்ங்க.. ரொம்பவே சத்தானது..

By Kalai Selvi  |  First Published Jul 26, 2024, 7:00 AM IST

Egg Idli Recipe  : இந்த கட்டுரையில் முட்டையை வைத்து இட்லி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.


காலை டிபனுக்கு உங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் ஒரே மாதிரியாக இட்லி செய்து கொடுக்காமல், சற்று வித்தியாசமாக செய்து கொடுக்க விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்கான பதிவு தான் இது. ஆம் உங்கள் வீட்டில் முட்டை இருந்தால் அதைக் கொண்டு வித்தியாசமான சுவையில் இட்லி செய்து கொடுங்கள். இந்த முட்டை இட்லியை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும் மற்றும் இது ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக, இந்த முட்டை இட்லி செய்வது மிகவும் சுலபம். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் முட்டையை வைத்து இட்லி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  காலை டிபனுக்கு சத்தான வெஜிடபிள் இட்லி.. இப்படி செஞ்சு அசத்துங்க!

Latest Videos

undefined

முட்டை இட்லி செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை - 7
காய்ச்சாத பால் - 4 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 2 (துருவியது)
மிளகு - 1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: குட்டீஸ்க்கு பிடிச்ச பொடி இட்லி.. இப்படி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

செய்முறை:

  • முட்டை இட்லி செய்ய முதலில் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்த முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் காய்ச்சாத பால், மிளகு தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு  ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது ஒரு கடையை அடைப்பில் வைத்து அதில் நினைவூட்டி சூடானதும் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி குடைமிளகாய் கேரட் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் அதன் பிறகு அதில் மிளகுத்தூள் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பின் அடுப்பை அணைத்துவிட்டு வதைக்கியதை கலக்கி வைத்த முட்டையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதனை அடுத்து அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வையுங்கள். பிறகு அதில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் கலக்கி வைத்த முட்டையை இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடம் வேக வையுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவைகள் முட்டை இட்லி ரெடி. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுக்கு பதிலை உங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!