பேச்சிலர்களுக்கு...  சிம்பிளான காரசாரமான சுவையில் தக்காளி குழம்பு.. ரெசிபி இதோ!

By Kalai SelviFirst Published Jul 25, 2024, 2:40 PM IST
Highlights

Tomato Curry Recipe : இந்த கட்டுரையில் காரசாரமான சுவையில் தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் காய்கறிகள் ஏதும் இல்லையா? தக்காளி மட்டும்தான் இருக்கிறதா? அப்படியானால் காரசாரமான சுவையில் தக்காளி குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த தக்காளி குழம்பு செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். முக்கியமாக, பேச்சிலர்கள் இந்த தக்காளி குழம்பு செய்து சாப்பிடும் வகையில் சிம்பிளாக இருக்கும். தக்காளியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இந்த குழம்பு ஆரோக்கியமானதும் கூட சரி வாங்க..இப்போது இந்த கட்டுரையில் சுவையான தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

Latest Videos

தக்காளி - 4 (அரைத்தது)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:   10 நிமிடத்தில் சுவையான தேங்காய் சாதம்.. இப்படி செஞ்சி அசத்துங்க..!

அரைப்பதற்கு..
பட்டை - 1 தூண்டு
கிராம்பு - 3
சோம்பு - 1/4 ஸ்பூன்
கசகசா - 1/2 ஸ்பூன்
மல்லி - 1/2 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3
தங்காளி - 
தேங்காய் - 1/2 கப் (துருவியது)

இதையும் படிங்க:  காளான் வாங்குனா இப்படி ஒருமுறை  வறுவல் செஞ்சி சாப்பிடுங்க.. டேஸ்ட்டா இருக்கும்!

செய்முறை:

தக்காளி குழம்பு செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ரெண்டு பெரிய தக்காளி, துருவிய தேங்காய், இஞ்சி, பூண்டு, மல்லி, கசகசா, சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் கழித்து அரைத்து வைத்துள்ள தக்காளி கூழ் சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விடுங்கள். இப்போது, இதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பிறகு மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறி விடுங்கள். சுமார் 15 நிமிடம் நன்கு கொதிக்க விடுங்கள் அவ்வளவுதான். காரசாரமான  சுவையில் தக்காளி குழம்பு தயாரி த்த குழம்பை சூடான சாதத்திற்கு வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!