Vegetable Idli Recipe : குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு கொடுக்க விரும்பினால் வெஜிடபிள் இட்லி செய்து கொடுங்கள். ரெசிபி இங்கே..
இன்று காலை உங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது சத்தான உணவு செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது. ஆம், உங்கள் வீட்டில் இட்லி மாவு இருந்தால் அதில் சில காய்கறிகளை சேர்த்து இட்லி செய்து கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில், அதன் சுவை சற்று வித்தியாசமாகவும் சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருக்கும். முக்கியமாக, இந்த இட்லியில் காய்கறிகள் சேர்த்திருப்பதால், அவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. மேலும், இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் வெஜிடபிள் இட்லி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: இட்லி மாவு இல்லனா கோதுமை மாவுல இட்லி சுட்டு பாருங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்.. ரெசிபி இதோ!
வெஜிடபிள் இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 3 கப்
கேரட் - 1/2 கப் (துருவியது)
பீன்ஸ் - 1/4 கப் (நறுக்கியத
சீரகம் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
அசாஃபோடிடா - 1 சிட்டிகை
இஞ்சி விழுது - 1/4 ஸ்பூன்
பச்சை பட்டாணி - 1/4 கப் (வேகவைத்தது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: Suraikai Idli : சத்தான காலை உணவு சாப்பிட விரும்பினால் 'சுரைக்காய் இட்லி' செஞ்சு சாப்பிடுங்க! ரெசிபி இதோ..
செய்முறை:
வெஜிடபிள் இட்லி செய்ய முதலில் இட்லி மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலைக்கு ஒரு பாத்திரத்தை கொண்டு மூடி வையுங்கள். இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்றாக வத்தியதும் அதில், பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லியை தூவி ஒரு முறை கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள் இப்போது இந்த கலவையை இட்லி மாவுடன் கலந்து, இட்லி சட்டியில் வைத்து அவித்து எடுக்கவும். அவ்வளவுதான் ருசியானா மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் இட்லி ரெடி. இந்த வெஜிடபிள் இட்லியுடன் நீங்கள் தக்காளி சட்னி அல்லது பூண்டு சட்னியுடன் சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D