Pachai Payaru Dosai Recipe : இந்த கட்டுரையில் பச்சை பயிறு வைத்து மொறு மொறுபான தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
காலை வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான டிபன் ஏதாவது செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு. அப்படியானால், பச்சை பயிறு வைத்து ஆரோக்கியமான மொறு மொறு தோசை செய்து கொடுங்கள். பொதுவாகவே குழந்தைகள் தோசையை விரும்பி சாப்பிடுவார்கள். எனவே, இன்றைக்கு டிபனுக்கு இந்த பச்சை பயிறு தோசை செய்து கொடுங்கள் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த தோசை அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக, இந்த தோசை செய்வது ரொம்பவே சுலபமாக இருக்கும். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் பச்சை பயிறு தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: உங்க குழந்தை வாழைப்பழம் சாப்பிட மாட்டேங்குதா..? அப்ப இப்படி தோசை செஞ்சு கொடுங்க.. தட்டு காலியாகும்!
பச்சை பயிறு தோசை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சை பயிறு - 1 கப்
அரிசி - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: தோசை மாவு இல்லையா? அப்ப ரவையும் தேங்காயும் வச்சு இப்படி ஒருமுறை தோசை சுட்டு பாருங்க டேஸ்ட்டா இருக்கும்!
செய்முறை:
பச்சை பயிறு தோசை செய்ய முதலில், எடுத்து வைத்த பச்சை பயிருடன் அரிசியையும் சேர்த்து நன்கு கழுவி தண்ணீரில் சுமர் எட்டு மணி நேரம் ஊற வையுங்கள். எனவே, இதை நீங்கள் முந்தின நாளை ஊற வைக்கவும். பிறகு மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டி அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும். இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, சீரகம், கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். மாவானது தோசை சுடும் பதத்திற்கு இருக்க வேண்டும்.
இப்போது தோசை சுடுவதற்கு அடுப்பில் ஒரு கல்லை வைத்து அதில் எண்ணெய் தடவி கரைத்து வைத்துள்ள மாவை தோசை வடிவில் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு தோசையை சுற்றி எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அப்போதுதான் தோசை சாப்பிடுவதற்கு மொறு மொறுப்பாக இருக்கும். பிறகு தோசையை இரண்டு பக்கமும் நன்கு பிரட்டி போட்டு வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் சத்தான பச்சை பயிறு தோசை ரெடி. இந்த தோசைக்கு நீங்கள் கார சட்னி, தேங்காய் சட்னி அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த சட்னியையும் வைத்து சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D