Aadi Pooram Akkaravadisal : இந்த கட்டுரையில் ஆடிப்புரம் அன்று செய்யப்படும் அக்காரவடிசல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
அக்காரவடிசல் அனைவருக்கும் பிடிக்கும். பொதுவாகவே, இது ஆடிப்புரம் அன்றுதான் செய்வது வழக்கம். அது தவிர, மார்கழி மாதத்திலும் செய்து, ஆண்டாளுக்கு படைக்கப்படும். ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில்களில் இது பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த அக்காரவடிசல் செய்வதில் விசேஷம் என்னவென்றால், அரிசி மற்றும் பருப்பை தண்ணீர் ஏதும் சேர்க்காமல், முற்றிலும் பாலில் வேகவைத்து, கூடுதலாக வெல்லம் மற்றும் நெய் சேர்த்து செய்யப்படுகிறது. சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் அக்காரவடிசல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வாழைப்பழமும், ரவையும் இருக்கா? 10 நிமிடத்தில் சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி!
அக்காரவடிசல் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசி பயிறு - 1/2 கப்
பால் - 1 1/2 லிட்டர்
வெல்லாம் - 2 1/2 கப்
நெய் - 1/2 கப்
முந்திரி பருப்பு - 15
காய்ந்த திராட்சை - 20
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
இதையும் படிங்க: 1 கப் கோதுமை மாவு இருக்கா..?! டேஸ்டான போண்டா ரெடி! ரெசிபி இதோ...
செய்முறை:
அக்காரவடிசல் செய்ய முதலில், ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்த பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, பொன்னிறமாகும் வரும் வரை வறுக்கவும். அவற்றை நன்கு வறுத்தப்பிறகு ஒரு முறை கழுவி கொள்ளுங்கள். பிறகு மீண்டும் பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைக்கவும் இதனுடன் எடுத்து வைத்த பாலையும் சேர்த்து வேகவைக்கவும். அடுப்பை குறைவான தீயில் வைக்கவும். பாசிப்பருப்பு நன்கு மசிந்து போகும் வரை வேக வையுங்கள்.
மறுபுறம், வெல்லப்பாகு காய்ச்சுவதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் எடுத்து வைத்த வெல்லத்தை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடுங்கள். வெல்லம் நன்கு கரைந்து வந்ததும், அதை வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது பாசிப்பருப்பு நன்கு குழைந்த பிறகு வெல்ல பாகை இதனுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் அதில் எடுத்து வைத்த முந்திரி பருப்புகளை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள் இதனுடன் காய்ந்த திராட்சையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வறுத்த, முந்திரி மற்றும் திராட்சையை அக்காரவடிசல் உடன் சேர்க்கவும். இதனுடன் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளுங்கள் பிறகு ஏலக்காய் மற்றும் கிராம்பு லேசாக இடித்து அதில் சேர்க்கவும். உங்களுக்கு தேவைப்பட்டால் மேலும் நெய் சேர்த்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் டேஸ்ட்டான அக்காரவடிசல் ரெடி
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D