காளான் வாங்குனா இப்படி ஒருமுறை  வறுவல் செஞ்சி சாப்பிடுங்க.. டேஸ்ட்டா இருக்கும்!

By Kalai Selvi  |  First Published Jul 22, 2024, 2:56 PM IST

Mushroom Stir Fry : இந்த கட்டுரையில் காளான் வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.


காளான் அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்களில் ஒன்றாகும் இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளது. எனவே, இதை அவ்வப்போது சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. நீங்கள் எப்போதும் காளானில் பிரியாணி, குழம்பு, கூட்டு செய்து சாப்பிட்டுகிறீர்களா? அப்படியானால் ஒரு முறை காளானில் வறுவல் செய்து சாப்பிடுங்கள். காளான் வறுவல் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். முக்கியமாக, இது செய்வது மிகவும் ஈஸி. ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காளானில் இப்படி வறுவல் செய்து கொடுங்கள். அவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் காளான் வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  கோழி குழம்பு சுவையில் காளான் குழம்பு... ஒரு முறை செய்ங்க.. அடிக்கடி செய்வீங்க..

Latest Videos

undefined

காளான் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
காளான் - 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் - 2 
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு

இதையும் படிங்க:  குக்கரில் குழையாமல் டேஸ்ட்டான காளான் பிரியாணி... 10 நிமிடத்தில் செய்திடலாம்..!

செய்முறை:
காளான் வறுவல் செய்ய முதலில், ஒரு கடையை அடைப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும், அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் காளானை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். காளானிலிருந்து தண்ணீர் வெளியேறியதும், அந்த தண்ணீர் நன்றாக வற்றியதும், அதில் கரம் மசாலா சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் டேஸ்டான காளான் வறுவல் தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!