இனிமே கசப்பா இருக்குன்னு பாகற்காயை தவிர்க்காதீங்க.. எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

By Ramya s  |  First Published Sep 15, 2023, 7:42 AM IST

பாகற்காயை நம் உணவில் சேர்த்துக்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். பாகற்காயின் உள்ள ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


பலருக்கும் பிடிக்காத ஒரே காய் என்றால் அது பாகற்காய். அதன் கசப்பு சுவை காரணமாக நம்மில் பலரும் பாகற்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் பாகற்காயில் வைட்டமின் சி, நார்ச்சத்து என ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பாகற்காயை நம் உணவில் சேர்த்துக்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். பாகற்காயின் உள்ள ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சத்துக்கள் நிறைந்தது

Latest Videos

undefined

பாகற்காய் வைட்டமின் சி, வைட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன. வைட்டமின் சி என்பது, நோய் தடுப்பு, எலும்பு உருவாக்கம் மற்றும் காயங்களை குணப்படுத்துவதற்கு முக்கியமான நுண்ணூட்டச்சத்து ஆகும். வைட்டமின் ஏ என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சரியான பார்வையை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை தவிர, பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் இரும்புச் சத்துகளும் பாகற்காயில் நிறைந்துள்ளன.

ரத்த சர்க்கரையை குறைக்கும்

பாக்ற்காயில் உள்ள சக்தி வாய்ந்த மருத்துவ குணங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள பழங்குடி சமூகங்கள் நீரிழிவு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாரம்பரியமாக பாகற்காயை பயன்படுத்துகின்றன. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று பாகற்காய் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக உறுதிப்படுத்தியுள்ளது. உதாரணமாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 24 பெரியவர்களை உள்ளடக்கிய 3 மாத ஆய்வில், தினமும் பாகற்காயை உட்கொள்வதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தது கண்டறியப்பட்டது.

தினமும் தேன் மற்றும் லவங்கப்பட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? இவ்வளவு நன்மைகள் இருக்கா?

புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது

பாகற்காயில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்ட குறிப்பிட்ட சேர்மங்கள் இருப்பதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, பாகற்காய் சாறு வயிறு, பெருங்குடல், நுரையீரல் போன்ற உடல் பகுதிகளில் உள்ள புற்றுநோய் செல்களை அகற்றுவதில் செயல்திறனை வெளிப்படுத்துகிறது என்பதை ஆய்வக ஆய்வு நிரூபித்தது.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது

அதிக அளவு கொலஸ்ட்ரால் உங்கள் தமனிகளில் கொழுப்புத் தகடுகளை உருவாக்கலாம், உங்கள் இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக மாறுவதால், இதய நோய் அபாயம் அதிகரிக்கும். சமீபத்திய ஆய்வில், பாகற்காய் சாறு கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது என்பது கண்டறியப்பட்டது. 

காலை வெறும் வயிற்றில் 'இந்த' நீரை குடிங்க...அப்புறம் நடக்கும் அதிசயத்தை நீங்களே பாப்பீங்க..!!

அதிக நார்ச்சத்து உட்கொள்ளல்

பாகற்காய் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த பாகற்காய், குறைந்த கலோரி உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது, ஒவ்வொரு 100 கிராம் பகுதியிலும் தோராயமாக 2 கிராம் நார்ச்சத்து காணப்படுகிறது. இந்த நார்ச்சத்து  பசியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் பசியைக் குறைக்கிறது. மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகிறது.

click me!