வாழைப்பழமும், ரவையும் இருக்கா? 10 நிமிடத்தில் சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி!

Published : Jul 17, 2024, 05:33 PM ISTUpdated : Jul 17, 2024, 08:14 PM IST
வாழைப்பழமும், ரவையும் இருக்கா? 10 நிமிடத்தில் சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி!

சுருக்கம்

Banana Rava Sweet : மாலை நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஸ்வீட் செய்து கொடுக்க விரும்பினால் உங்களுக்கான பதிவு தான் இது.

ஈவினிங் டைம்ல வீட்டில் இருப்பவர்கள் இனிப்பாக ஏதாவது ஸ்னாக்ஸ் செய்து தரும்படி கேட்கிறார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் வாழைப்பழமும் ரவையும் இருந்தால், டேஸ்டான ஒரு ஸ்வீட் செய்து கொடுங்கள். இந்த ஸ்வீட் நெய் சேர்த்து செய்வதால் சாப்பிடுவதற்கு சுவையாகவும், மனமாகவும் இருக்கும். முக்கியமாக, இந்த ஸ்வீட் செய்வதற்கு ஈசியாகவும் இருக்கும். இந்த ஸ்வீட்டை உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படிங்க:  10 நிமிடத்தில் உருளைக்கிழங்கில்  மொறுமொறுனு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்..  உடனே செஞ்சி பாருங்க..!

தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 2 (நன்கு பழுத்தது)
ரவை - 1 கப்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
காய்ச்சிய பால் - 1/2 கப்
சர்க்கரை - 3 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
நெய் -  2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி, பாதாம் - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

இதையும் படிங்க:  சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ் முருங்கைக்கீரை வடை... ரெசிபி இதோ..!

செய்முறை:

  • இந்த ஸ்வீட் செய்ய முதலில், ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும், முந்திரிப் பருப்பு மற்றும் பதாம் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்து அதை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 
  • பிறகு, அதே கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும், அதில் ரவையை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும். பின் அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு நெய் ஊத்தி சூடானதும் துருவிய தேங்காயை போட்டு, நீர் வற்றும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
  • இதனை அடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த வாழைப்பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு மசித்து கொள்ளுங்கள். பிறகு, அதில் வறுத்து வைத்த ரவை, தேங்காய் மற்றும் முந்திரி, பாதாமை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். இதனுடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு பிசைந்த மாவை 
  • சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுங்கள். அவ்வளவுதான்  அருமையான ருசியில் வாழைப்பழ ரவா ஸ்வீட் ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Magnesium Rich Fruits: இதய ஆரோக்கியத்திற்கு உதவும் 7 மெக்னீசியம் நிறைந்த பழங்கள் லிஸ்ட்
Dark Chocolate: சொன்னா நம்பமாட்டீங்க.! டார்க் சாக்லேட் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?