வீட்ல காய்கறிகள் இல்லையா? அப்பளம் இருந்தால் இப்படி ஒன் டைம் குழம்பு செய்ங்க... டேஸ்டா இருக்கும்!

Published : Jul 17, 2024, 01:53 PM ISTUpdated : Jul 17, 2024, 02:01 PM IST
வீட்ல காய்கறிகள் இல்லையா? அப்பளம் இருந்தால் இப்படி ஒன் டைம் குழம்பு செய்ங்க... டேஸ்டா இருக்கும்!

சுருக்கம்

இந்த பதிவில் அப்பளத்தை வைத்து சுவையான குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இன்று மதியம் சமைப்பதற்கு வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா..? அப்படியானால் காய்கறி எதுவும் இல்லாமல் குழம்பு எப்படி செய்வது என்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அப்பளம் இருக்கா? அப்படியானால் உடனே அதில் சூப்பரான குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பு சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வது ரொம்பவே சுலபம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த குழம்பு செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் அப்பளத்தை வைத்து சுவையான குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:   நாவூறும் சுவையில் மாங்காய் சாம்பார்.. ரெசிபி இதோ..!

அப்பள குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

அப்பளம் - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 12 
பூண்டு - 10
தக்காளி - 2
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
புளி - சிறிதளவு
தேங்காய் பால் - 1/2 கப்
வெல்லம் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்

இதையும் படிங்க:   ஐயங்கார் ஸ்டைலில் ருசியான வத்தல் குழம்பு.. ரெசிபி இதோ..!

செய்முறை:

  • அப்பளம் குழம்பு செய்ய முதலில் உங்களுக்கு தேவையான அளவில் அப்பளத்தை பொரித்தி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு புளியை தண்ணீரில் ஊற வைத்து அதில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.  பின் சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து நன்று நன்கு வதக்கவும். தக்காளி நன்கு மசிந்ததும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். வதக்கும்போது அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும். 
  • அதன் பிறகு அதில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள்.  பின்பு அதில் புளி சாறு மற்றும் தேங்காய் பால் ஊற்றி ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும். இதனை அடுத்து வெள்ளத்தையும் சேர்த்து கிளறி விட்டு ஒருமுறை கொதிக்க விடுங்கள். இறுதியாக பொரித்து வைத்த அப்பளத்தை குழம்பில் போட்டு கிளறிவிடிங்கள். பின் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் அப்பளம் குழம்பு ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Egg Cholesterol : முட்டை மஞ்சள் கரு கொலஸ்ட்ராலை அதிகரிக்குமா? ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்?
Fake Dates Alert: விலை குறைவு என்று வாங்காதீங்க.! பேரிச்சம்பழம் அசலா, தரமற்றதா? கண்டுபிடிக்க இந்த 7 விஷயங்களை பாருங்க!