காலையில குழந்தைக்கு மதியம் டிபனுக்கு இந்த வரைட்டி ரைஸ் செய்து கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க

By Kalai SelviFirst Published Jul 16, 2024, 7:00 AM IST
Highlights

Capsicum Rice Recipe : இந்த கட்டுரையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேப்சிகம் ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பள்ளி செல்லும் குழந்தைக்கு காலையில், மதியம் டிபன் பாக்ஸிற்கு என்ன செய்து கொடுப்பது என்று தெரியவில்லையா? அவர்களுக்கு வித்தியாசமான சுவையில், அதுவும் அவர்கள் விரும்பும் சாப்பிடும் வகையில், ஏதாவது ஒரு ரெசிபி செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது. 

பொதுவாகவே வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள் எலுமிச்சை சாதம் புளி சாதம் தேங்காய் சாதம், நெய் சாதம் என்று பல வரைட்டி ரைஸ்கள் நீங்கள் செய்து கொடுத்திருந்தால், ஒருமுறை கேப்சிகம் ரைஸ் செய்து கொடுங்கள். இந்த ரைஸ் ஃபிரைட் ரைஸ் விட சாப்பிடுவதற்கு டேஸ்டாக இருக்கும். முக்கியமாக இந்த ரைஸ் செய்வது ரொம்பவே ஈஸி. மதியம் டிபன் பாக்ஸிற்கு உங்கள் குழந்தைக்கு இந்த கேப்ஸிகம் ரைஸ் ஒருமுறை செய்து கொடுங்கள். அவர்கள் அடிக்கடி கேட்பார்கள். சரி வாங்க. இப்போது இந்த கட்டுரையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேப்ஸிகம் ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Latest Videos

இதையும் படிங்க:  குட்டீஸ்க்கு பிடிச்ச பொடி இட்லி.. இப்படி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

குடைமிளகாய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப் 
குடைமிளகாய் - 2 
வரமிளகாய் - 4
பூண்டு - 10
கருவேப்பிலை - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சத்தூள் - 1/2 ஸ்பூன்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் -  தேவையான அளவு

இதையும் படிங்க:  தோசை மாவு இல்லையா? அப்ப ரவையும் தேங்காயும் வச்சு இப்படி ஒருமுறை தோசை சுட்டு பாருங்க டேஸ்ட்டா இருக்கும்!

செய்முறை:

முதலில் பாஸ்மதி அரிசியை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக அரிசி குறையாமல் உதிரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வர மிளகாய் மற்றும் பூண்டை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானது வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் அதில் தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். தக்காளி நன்கு மசிந்ததும் அதில் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குடைமிளகாய் நன்கு வதங்கியதும் அதில், அரைத்து வைத்த வர மிளகாய் பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். மசலாவின் பச்சை வாசனை போன பிறகு இதில் மஞ்ச பொடியை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். இறுதியாக எடுத்து வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் குடைமிளகாய் சாதம் ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!