ருசியான பூண்டு குழம்பு இப்பவே செஞ்சு சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!

Published : Aug 08, 2024, 02:32 PM ISTUpdated : Aug 08, 2024, 02:40 PM IST
ருசியான பூண்டு குழம்பு இப்பவே செஞ்சு சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!

சுருக்கம்

Poondu Kulambu Recipe : இந்த கட்டுரையில் பூண்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மதியம் சமைப்பதற்கு வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் பூண்டு வெங்காயம் மட்டும்தான் இருக்கா? அப்படி பூண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த பூண்டு குழம்பு சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும். குறிப்பாக, இந்த குழம்பு நல்லெண்ணெய் வைத்து செய்வதால் சாப்பிடுவதற்கும் மணமாகவும், வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் பூண்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:  வீட்ல காய்கறிகள் இல்லையா? அப்பளம் இருந்தால் இப்படி ஒன் டைம் குழம்பு செய்ங்க... டேஸ்டா இருக்கும்!

பூண்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

பூண்டு - 15
சின்ன வெங்காயம் - 10
புளி கரைசல் - சிறிதளவு
குழம்பு மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை 
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  கறி குழம்பு சுவையை மிஞ்சும் சைவ கறி குழம்பு.. ஒருமுறை செய்ங்க அடிக்கடி செய்வீங்க!!

செய்முறை:

பூண்டு குழம்பு செய்யும் முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் எடுத்து வைத்த பூண்டு, வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும் அதில் ஏற்கனவே தயாரித்து வைத்த புளிக்கரைசலில் ஊற்றி ஒரு முறை கிளறி விடுங்கள். பின் அதில் குழம்பும் மிளகாய் தூள் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு அதில் சிறிதளவு தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குழம்பில் எண்ணெய் தனியாக பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் ருசியான பூண்டு குழம்பு தயார். சூடான சாதத்தில் இந்த பூண்டு குழம்பை ஊற்றி சாப்பிட்டால், சுவை அருமையாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை உங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Ghee Benefit: குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் நெய் கொடுப்பதால் இவ்வளவு நலனா?
Gas Problem: வயிறு உப்பசம், கேஸ் தொல்லையா? இந்த ஒரு பானம் போதும்!