மட்டன் கோலா உருண்டை குழம்பு.. இப்படி செஞ்சு அசத்துங்க!!

Published : Jul 30, 2024, 02:47 PM ISTUpdated : Jul 30, 2024, 02:52 PM IST
மட்டன் கோலா உருண்டை குழம்பு.. இப்படி செஞ்சு அசத்துங்க!!

சுருக்கம்

Mutton Kola Urundai Kulambu Recipe : கட்டுரையில் மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

மட்டன் கோலா உருண்டை குழம்பு அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். முக்கியமாக இந்த மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை கண்டிப்பாக இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
சோம்பு - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  பாய் வீட்டு மட்டன் பிரியாணி ஒருமுறை இப்படி செய்ங்க.. திரும்பத் திரும்ப சாப்பிடுவீங்க!

உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:

மட்டன் - கால் கிலோ (எலும்பில்லாதது)
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் -3
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க: கம கம மட்டன் கீ ரோஸ்ட் மசாலா செய்வது எப்படி?

செய்முறை:

மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்ய முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, கசகசா, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உருண்டை செய்ய, அதே ஜாரில் மிக்ஸி எடுத்து வைத்த மட்டன் வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, மிளகு, பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்து வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் குழம்புக்கு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி கொதிக்க வைக்கவும். குழம்பு நன்கு கொதித்ததும் அதில் உருண்டைக்கு அரைத்து வைத்ததை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி குழம்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் இறக்கிவிடவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவைகள் மட்டன் கோலா உருண்டை குழம்பு தயார். இந்தக் குழந்தை சூடான சாதத்திற்கு சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Peerkangai Pakoda: பீர்க்கங்காயில் இப்படி பகோடா செய்து பாருங்க! மொறுமொறுப்பான ஈஸி ரெசிபி
Healthy Breakfast: அவசரமான காலை நேரத்திலும் ஆரோக்கியமான காலை உணவைத் தயாரிப்பது எப்படி?