இட்லி தோசைக்கு அட்டகாசமான சின்ன வெங்காய சட்னி.. ரெசிபி இதோ!

Published : Jul 30, 2024, 09:19 AM IST
இட்லி தோசைக்கு அட்டகாசமான சின்ன வெங்காய சட்னி.. ரெசிபி இதோ!

சுருக்கம்

Chinna Vengaya Chutney Recipe : இந்த கட்டுரையில் சின்ன வெங்காயம் வைத்து சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போறீங்க அப்படி எதாவது இருக்கு என்ன சட்னி செய்வது என்று தெரியவில்லையா? உங்களுக்கு அந்த பதிவு தான் இது. ஆம், உங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் இருக்குதா? அப்படியானால் அதில் சுவையான சட்னி செய்து சாப்பிடுங்கள். இந்த சட்னி சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாகவும், செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் சின்ன வெங்காயம் வைத்து சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  டக்குனு 5 நிமிஷத்துல இட்லி தோசைக்கு பக்காவான மிளகு கார சட்னி..இன்னைக்கே செஞ்சு பாருங்க!

சின்ன வெங்காயம் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 10
வேர்க்கடலை - 1 கப்
தேங்காய் - 2 சில்லு 
வரமிளகாய் - 5
புளி - சிறிதளவு
நாட்டு சர்க்கரை - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்து பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  காரச் சட்னியை இப்படி ஒரு முறை செட்டிநாடு ஸ்டைலில் செஞ்சு கொடுங்க.. எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க!

செய்முறை:
சின்ன வெங்காயம் சட்னி செய்யும் முதலில் ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய் போட்டு லேசாக வறுக்கவும். அதை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். இதனுடன் கறிவேப்பிலை, புளி வேர்கடலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அதில் நறுக்கிய தேங்காய், தேவையான அளவு உப்பு மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கி, ஆறவைக்கவும். அவை நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அரைத்த சட்டினியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின் அதை அரைத்து வைத்துள்ள சட்டினி உடன் சேர்த்து கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் சின்ன வெங்காய சட்னி ரெடி. இந்த சட்னியை சூடான இட்லி தோசையுடன் சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை உங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Egg Cholesterol : முட்டை மஞ்சள் கரு கொலஸ்ட்ராலை அதிகரிக்குமா? ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்?
Fake Dates Alert: விலை குறைவு என்று வாங்காதீங்க.! பேரிச்சம்பழம் அசலா, தரமற்றதா? கண்டுபிடிக்க இந்த 7 விஷயங்களை பாருங்க!