வீடு மணக்கும் ருசியான பருப்பு கடையல்.. ரெசிபி இதோ!

Published : Jul 29, 2024, 02:41 PM ISTUpdated : Jul 29, 2024, 02:47 PM IST
வீடு மணக்கும் ருசியான பருப்பு கடையல்.. ரெசிபி இதோ!

சுருக்கம்

Paruppu Kadaiyal Recipe : இந்த கட்டுரையில் சுவையான பருப்பு கடையல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

மதியம் என்ன சமைப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு அந்த பதிவு தான் இது. தினமும் பருப்பு வைத்து சாம்பார் செய்து சாப்பிட்டு போரடித்து விட்டால், பருப்பில் சுலபமாக செய்யக்கூடிய சுவையான பருப்பு கடையல் செய்து சாப்பிடுங்கள். பேச்சிலர்கள் கூட இதை செய்து சாப்பிடலாம். ஏனெனில், இது செய்வதற்கு அவ்வளவு எளிதாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் சுவையான பருப்பு கடையல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: நாவூறும் செட்டிநாடு காளான்... நொடியில் காலியாகிடும்...ரெசிபி இதோ!

பருப்பு கடையல் செய்ய தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 100 கிராம் 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 5 
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  வீட்ல ராஜ்மா இருந்தா ஒருமுறை இப்படி புலாவ் செஞ்சி பாருங்க.. டேஸ்டா இருக்கும்!

செய்முறை:
பருப்பு கடையில் செய்ய முதலில், ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் கழுவி வைத்த துவரம் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து 3 விசில் வைத்து இறக்கவும். விசில் போனதும் குக்கரில் மூடியை திறந்து பருப்பை ஒரு ஆழமான பாத்திரத்தில் ஊற்றி விடுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.  தாளித்த இதனை பருப்பில் சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் பருப்பு கடையல் தயார். இந்த பருப்பு கடையலை நீங்கள் சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் உங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Uric Acid : மூட்டு வலியை நீக்கும் சூப்பர் 'சட்னி' ஒருமுறை சாப்பிட்டு பாருங்க! அற்புத பலன்கள் இருக்கு
Kambu Paniyaram : கம்பு பணியாரத்திற்கு 'சர்க்கரை' நோயை கட்டுப்படுத்துற சக்தி இருக்கு.. ரொம்ப ஈஸியான ரெசிபி இதோ!