Milagu Kara Chutney Recipe : இந்த கட்டுரையில் அனைவரும் விரும்பி சாப்பிட மிளகு கார சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய போகிறீர்கள் என்றால், அதற்கு சைடிஷ்ஷாக சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் காரமாக சட்னி ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? அதுவும், மிக விரைவாக செய்ய கூடியதாகவும், வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்க வேண்டுமா? அப்படியானால், உங்களுக்காக மிளகு வைத்து கார சட்னி எப்படி செய்வது என்று கீழே கொடுத்துள்ளோம். அந்த மிளகு சட்னி ரெசிபியின் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மிளகு கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய தக்காளி - 5 (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 3/4 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மிளகு கார சட்னி செய்ய முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், எடுத்து வைத்த மிளகாயை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பையும் அணைத்து விடுங்கள். இப்போது அதே சூடான கடாயில் மிளகு சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை ஆன் செய்ய வேண்டாம். இல்லையெனில், மிளகு வெடித்து சிதறிவிடும். அடுப்பில் அதே சூட்டில் இருக்கும் கடாயில், வெந்தயத்தையும் சேர்த்து நன்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை ஆன் செய்து அதில் அதே கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பெருங்காயம், தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். தக்காளி நன்கு மசிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அதை ஆற வையுங்கள்.
பிறகு வதைக்கிய எல்லா பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுந்தம், பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு அதில் கருவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அரைத்து வைத்த சட்டினியை இதனுடன் சேர்த்து நான்கு கிளரி விடுங்கள். அவ்வளவுதான் காரசாரமான சுவையில் மிளகு காரச் சட்னி ரெடி. இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை உங்களுக்கு அனுப்புங்கள்.