வீட்ல ராஜ்மா இருந்தா ஒருமுறை இப்படி புலாவ் செஞ்சி பாருங்க.. டேஸ்டா இருக்கும்!

By Kalai Selvi  |  First Published Jul 26, 2024, 2:49 PM IST

Rajma Pulao Recipe : இந்த கட்டுரையில் ராஜ்மா புலாவ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.


புலாவ் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். புலாவில் பல வகைகள் உள்ளன. அவற்றில், ஒன்று தான் ராஜ்மா புலாவ். இந்த ராஜ் புலாவ் சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் மற்றும் செய்வதற்கும் எளிதாக இருக்கும். முக்கியமாக இது ஆரோக்கியமானதும் கூட. ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ராஜ்ம புலாவ் செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் ராஜ்மா புலாவ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: ராஜ்மாவில் இப்படி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்.. ரெசிபி இதோ!

Tap to resize

Latest Videos

ராஜ்மா புலாப் செய்ய தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கப்
ராஜ்மா - 200 கிராம்
பட்டை - 1 சின்ன துண்டு
கிராம்பு - 4 
அன்னாசி பூ - 2 
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 2
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு (நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 3 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  Rajma Recipe : இன்று இரவு சப்பாத்தி உடன் ராஜ்மா மசாலா கறி செய்து சாப்பிடுங்கள்...ஆரோக்கியத்திற்கு நல்லது...!!

செய்முறை:

  • ராஜ்மா புலாவ் செய்ய முதலில், எடுத்து வைத்த ராஜ்மாவை நன்கு கழுவி, சுமார் 8 மணி நேரம் ஊற வைத்து, பிறகு அதை குக்கரில் சேர்த்து 5 விசில் விட்டு இறக்கவும். பின் பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுமார் 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  • இதனை அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாச்சி பூ, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போன பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் வேகவைத்த ராஜ்மாவை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு அதில் கரம் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன் பின் அதில் 1 கப் ராஜ்மா வேக வைத்த தண்ணீர் மற்றும் 3/4 கப் சாதாரண நீர் சேர்க்கவும். பின் பாசுமதி அரிசியை இதில் சேர்த்து ஒரு முறை கலக்கி விடுங்கள். இப்போது குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். குக்கரில் விசில் போன பிறகு மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் ராஜ்மா புலாவ் தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுக்கு பதிலை உங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!