Murungai Keerai Vadai Recipe : குழந்தைகளுக்குப் பிடித்த சாப்பிடுவதற்கு சுவையாகவும் ஆரோக்கியமான முருங்கைக்கீரை வடை செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக ஏதாவது செய்து கொடுக்க விரும்பினால், முருங்கைக்கீரையில் வடை செய்து கொடுங்கள். உருவாகவே பொதுவாகவே முருங்கைக்கீரையில் பொரியல் கூட்டு மட்டுமே செய்து சாப்பிட்டு இருப்போம் ஒரு முறை வடை செய்து சாப்பிடுங்கள் மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் இந்த வடை ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக இந்த வடை செய்வது ரொம்பவே சுலபம். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் முருங்கை கீரை வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: மதியம் மிச்சமான சாதம் இருக்கா?!மொறுமொறுப்பாக இப்படி வடை செஞ்சு பாருங்க.. ரெசிபி இதோ.. !
முருங்கை கீரை வடை செய்ய தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 1 கப்
உளுந்து - 200 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: 1 கப் அவல், உருளைக்கிழங்கு இருக்கா..?! 10 நிமிடத்தில் மொறு மொறு வடை செய்து சாப்பிடுங்க!
செய்முறை:
முருங்கைக்கீரை வடை செய்ய முதலில் எடுத்து வைத்த கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து பிறகு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் முக்கியமாக அதை தண்ணீரில் இல்லாமல் கொரகொர பதத்திற்கு அரைக்கவும்.. மாவு கையில் ஒட்டக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து எடுத்து வைத்த கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் இஞ்சியும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு அரைத்த மாவில் பச்சை மிளகாய், சீரகம், உப்பு, இஞ்சி, கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
அடுப்பில் வைத்து அதில் வடை பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். நன்றாக சூடானதும் அதில் தயாரித்து வைத்த மாவை சிறிதளவு எடுத்து வடை அளவிற்கு கையில் தட்டி, நடுவே ஒரு ஓட்டை போட்டு பின் எண்ணையில் போட்டு எடுங்கள். பிறகு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் முருங்கைக்கீரை வடை ரெடி. இந்த வடைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி அரைக்கீரை, சிறு கீரை, பசலைக்கீரை என எந்தக் கீரையையும் நீங்கள் சேர்க்கலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்பவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D