Chettinad Style Vathal Kulambu Recipe : இந்த பதிவில், செட்டிநாடு ஸ்டைலில் வத்தல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு வத்தல் குழம்பு சாப்பிட பிடிக்குமா .? அப்படியானால் செட்டிநாடு ஸ்டைலில் வத்தல் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த செட்டிநாடு வத்தல் குழம்பு சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வத்தல் குழம்பு செய்து கொடுக்க விரும்பினால், ஒரு முறை கண்டிப்பாக இந்த செட்டிநாடு ஸ்டைலில் வத்தல் குழம்பு செய்து கொடுங்கள், விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க... இப்போது இந்த பதிவில், செட்டிநாடு ஸ்டைலில் வத்தல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: செம்ம சுவையான தேங்காய் பால் பட்டாணி பிரியாணி.. ரெசிபி இதோ!
செட்டிநாடு வத்தல் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய் வத்தல் - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10
தக்காளி - 1
புளி கரைசல் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 4
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
வெல்லம் - சின்ன துண்டு
இதையும் படிங்க: டேஸ்ட்டான கேரளா ஸ்டைல் கோழிக்கறி குழம்பு.. ரெசிபி இதோ!
செய்முறை:
செட்டிநாடு ஸ்டைலில் வத்தல் குழம்பு செய்ய முதலில், ஒரு கடைய அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு அதில் எடுத்து வைத்த சுண்டைக்காயை போட்டு வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு வெந்தயம் சோம்பு, சீரகம், பூண்டு சின்ன வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு கண்ணாடி பதத்திற்கு வெந்ததும், அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
இப்போது அதில் ஏற்கனவே தயாரித்து வைத்த புளிக்கரைசலை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இதனுடன் உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். குழம்பு நன்றாக கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையையும், சின்ன துண்டு வெல்லத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்போது அட்டகாசமான சுவையில் செட்டிநாடு ஸ்டைலில் சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி. சூடான சாதத்துடன் சாப்பிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D